உடலில் பெரிய உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலில் கொழுப்பு படிவதால் அதன் ஆரோக்கியம் மோசமாகிறது.இந்த கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து மீள வெள்ளைப்பூண்டு மற்றும் எலுமிச்சையை மருந்தாக பயன்படுத்துவது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
1)வெள்ளைப்பூண்டு பற்கள் – நான்கு
2)எலுமிச்சம் பழம் – ஒன்று
செய்முறை விளக்கம்:-
முதலில் நான்கு பல் வெள்ளைப்பூண்டு எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாற்றை கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து தோல் நீக்கிய பூண்டு பற்களை போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.எலுமிச்சை சாறில் பூண்டு பற்கள் நன்றாக வெந்து வந்த பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.
பிறகு இதை மசித்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.பூண்டு பற்கள் கல்லீரல் கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது.இதை எலுமிச்சை சாறில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் கொழுப்பு கரையும்.