உடலில் பிதுங்கி நிற்கும் ஊளை சதைகளை கரைக்க.. வெறும் 2 பொருள் மட்டும் போதும்!!

Photo of author

By Divya

உடலில் பிதுங்கி நிற்கும் ஊளை சதைகளை கரைக்க.. வெறும் 2 பொருள் மட்டும் போதும்!!

Divya

நமது உணவுப் பழக்க வழக்கங்களால் உடலில் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் படிகிறது.இந்த கொழுப்பை கரைக்க கொள்ளு பருப்பை சாப்பிடலாம்.குறைவான விலைக்கு கிடைக்கும் கொள்ளு பருப்பில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.கொள்ளு பருப்பு உடல் எடையை குறைப்பதோடு,வயிற்றில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.

கொள்ளு நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள்,வாயுக்கள் வெளியேறிவிடும்.பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.உடல் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.சளி,ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய கொள்ளு சூப் செய்து குடிக்கலாம்.

கொள்ளு பருப்பில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள்:

**இரும்பு
**கால்சியம்
**புரதம்
**மாவுச்சத்து
**பொட்டாசியம்

கொழுப்பை கரைக்கும் கொள்ளு பானம்:

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – கால் கப்
2)கொள்ளு பருப்பு – ஒரு கப்
3)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் அளவிற்கு கொள்ளு பருப்பு எடுத்து பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசி சுத்தப்படுத்த வேண்டும்.

பிறகு இதை நிழலில் நன்கு காய வைக்க வேண்டும்.அதேபோல் கால் கப் கறிவேப்பிலையை நன்றாக காய வைக்க வேண்டும்.இவை இரண்டும் காய்ந்து வந்த பின்னர் வாணலியில் சேர்த்து தனி தனியாக வறுக்க வேண்டும்.

பிறகு இதை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைக்க வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு அரைத்த கொள்ளு பொடி இரண்டு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த பானத்தை பருகினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு,தேவையற்ற சதைகள் கரைந்துவிடும்.

கொள்ளு பானம் போல் கொள்ளு பருப்பில் அடை,சட்னி,தோசை,இட்லி,சப்பாத்தி போன்ற உணவுகள் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.காலை,மாலை நேரத்தில் டீக்கு பதில் கொள்ளு பவுடரில் ட்ரிங்க் செய்து குடித்து வந்தால் உடலில் கொழுப்புகள் குவியாது.