நாம் பின்பற்றும் ஆரோக்கியம் இல்லாத உணவுகளால் இரத்தக் குழாயில் கொழுப்பு படிகிறது.இரத்தக் குழாயில் அதிக கெட்ட கொழுப்பு படிந்தால் உயர் இரத்த அழுத்தம்,மாரடைப்பு போன்ற ஆபத்தான நோய் பாதிப்புகள் உண்டாகும்.
இரத்தக் குழாய் அடைப்பு அறிகுறிகள்:
1)மயக்கம்
2)பதட்டம்
3)தலைச்சுற்றல்
4)படபடப்பு
5)மந்த உணர்வு
இரத்தக் குழாய் அடைப்பை சரி செய்ய உதவும் மூலிகை பானம் தயாரிப்பது எப்படி?
தீர்வு 01:
எலுமிச்சை
பூண்டு பற்கள்
தேன்
தண்ணீர்
முதலில் நான்கு எலுமிச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.எலுமிச்சை விதையை மட்டும் நீக்கிவிடுங்கள்.
அடுத்து 10 பல் பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.இவை இரண்டையும் மிக்சர் ஜாரில் போட்டு வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து மூன்று லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.அதன் பிறகு அரைத்த எலுமிச்சை பூண்டு விழுதை அதில் போட்டு குறைவான தீயில் 10-15 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள்.
பிறகு இந்த பானத்தை நன்கு ஆறவைத்து ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளுங்கள்.அதன் பிறகு இந்த நீரில் தேன் கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பருகுங்கள்.
எலுமிச்சை,பூண்டு பானம் இரத்தக் குழாயில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை கரைத்துவிடும்.உயர் இரத்த அழுத்த பாதிப்பை குணப்படுத்திக் கொள்ள இந்த பானம் பருகலாம்.
தீர்வு 02:
தேன்
வெள்ளைப்பூண்டு
ஒரு கண்ணாடி பாட்டிலில் தோல் உரித்த பூண்டு பற்கள் 20 போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு பூண்டு பற்கள் மூழ்கும் வரை தேன் ஊற்றி இரண்டு தினங்கள் நன்றாக ஊறவைக்க வேண்டும்.
இந்த தேனில் ஊறவைத்த பூண்டு பற்களை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய் அடைப்பு குணமாகும்.
தினமும் ஒரு கிளாஸ் வெள்ளைப்பூண்டு தேநீர் பருகி வந்தால் இரத்தத்தில் படிந்துள்ள கொழுப்பு கரைந்துவிடும்.