கல்லீரலில் குவிந்த கொழுப்பை கரைக்க.. 48 நாள் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

கல்லீரலில் குவிந்த கொழுப்பை கரைக்க.. 48 நாள் காலையில் இதை மட்டும் சாப்பிடுங்கள்!!

Divya

உடல் ஆரோக்கியத்திற்கு கொழுப்புச்சத்து அவசியமானதாக இருக்கிறது.உடலுக்கு தேவைப்படும் ஆற்றலை கொழுப்பு கொடுக்கிறது.இருப்பினும் இந்த கொழுப்பின் அளவு அதிகரித்தால் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும்.

இந்த கெட்ட கொலஸ்ட்ரால் கல்லீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாட்டை பாதிக்கச் செய்கிறது.கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கிய வழிமுறையை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பார்லி அரிசி – 50 கிராம்
2)தண்ணீர் – ஒன்றரை கப்
3)கேரட் – ஒன்று
4)பூண்டு பல் – நான்கு
5)சீரகம் – ஒரு தேக்கரண்டி
6)இஞ்சி – ஒரு துண்டு
7)மிளகு – கால் தேக்கரண்டி
8)எண்ணெய் – தேவையான அளவு
9)வெங்காயம் – ஒன்று
10)பீன்ஸ் – நான்கு
11)கொத்தமல்லி தழை – சிறிதளவு
12)உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை விளக்கம்:-

1.அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 50 கிராம் அளவிற்கு பார்லி அரிசி போட்டு வறுக்க வேண்டும்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம்,அரை தேக்கரண்டி மிளகு சேர்த்து வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

2.இவற்றை நன்றாக ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு கேரட்,நான்கு பீன்ஸ்,ஒரு வெங்காயம்,ஒரு துண்டு இஞ்சி மற்றும் நான்கு பல் பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

3.அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு நறுக்கி வைத்துள்ள பொருட்களை அதில் போட்டு வதக்க வேண்டும்.

4.அதன் பிறகு ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.பிறகு அரைத்த பார்லியை அதில் கொட்டி கிளறிவிட வேண்டும்.

5.அதன் பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.இந்த பார்லி கஞ்சி குடிப்பதால் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு கரையும்.கல்லீரல் ஆரோக்கியம் மேம்பட இந்த பார்லி கஞ்சி குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளரி பிஞ்சு – ஒரு கப்
2)கொத்தமல்லி தழை – சிறிதளவு
3)மஞ்சள் தூள் – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

1.முதலில் வெள்ளரி பிஞ்சுகளை பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

2.அதன் பிறகு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து சாப்பிட வேண்டும்.இப்படி சாப்பிட்டு தொடர்ந்த 48 நாட்கள் சாப்பிட்டால் கல்லீரலில் படிந்துள்ள கொழுப்பு கரையும்.