கெட்ட வாயுக்களை வெளியேற்ற.. இந்த பொருட்களை பொடித்து தண்ணீரில் கலந்து குடிங்க!!

Photo of author

By Divya

கெட்ட வாயுக்களை வெளியேற்ற.. இந்த பொருட்களை பொடித்து தண்ணீரில் கலந்து குடிங்க!!

Divya

வாயுத் தொல்லையால் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)ஓமம் – 20 கிராம்
2)சீரகம் – 20 கிராம்
3)கருப்பு மிளகு – 20 கிராமம்
4)கறிவேப்பிலை – இரண்டு கொத்து
5)பெருங்காயம் – சிறிதளவு
6)சுக்கு – ஒரு பீஸ்
7)மணத்தக்காளி வற்றல் – 50 கிராம்

செய்முறை விளக்கம்:-

1.மணத்தக்காளி காய் மற்றும் கறிவேப்பிலையை வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.ஈரம் இல்லாமல் இரண்டு பொருளையும் காய வைத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து ஓமம்,சீரகம்,சுக்கு மற்றும் கருப்பு மிளகை சொல்லிய அளவுப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.இவை அனைத்தையும் வாணலி ஒன்றில் போட்டு குறைந்த தீயில் வறுக்க வேண்டும்.வாசனை வரும் வரை வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

3.இதை தட்டு ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.அதன் பின்னர் வாணலி சூட்டில் கறிவேப்பிலை மற்றும் மணத்தக்காளி வற்றலை போட்டு வறுக்க வேண்டும்.

4.பிறகு வறுத்த பொருட்களை நன்றாக ஆறவைத்துக் கொள்ள வேண்டும்.இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

5.பிறகு இந்த பொடியில் சிறிதளவு பெருங்காயத் தூள் சேர்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ள வேண்டும்.

6.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு கொதிக்க பருகினால் வாயுத் தொல்லை அகலும்.இந்த பொடியை சூடான சாதம்,இட்லி போன்ற உணவுகளுடன் வைத்து சாப்பிடலாம்.

வாயுக் கோளாறு,வயிறு உப்பசம் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் இந்த பொடியை சாப்பிட்டு உரிய தீர்வு காணலாம்.

வாயுத் தொல்லைக்கு மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:

1)சுக்கு – ஒரு துண்டு
2)மிளகு – ஒரு தேக்கரண்டி
3)சீரகம் – ஒரு தேக்கரண்டி
4)பெருங்காயம் – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.ஒரு சுக்கு துண்டு எடுத்து தோல் நீக்கிவிட்டு நெருப்பில் போட்டு சுட்டெடுத்துக் கொள்ள வேண்டும்.

2.அடுத்து மிளகு,சீரகத்தை வாணலியில் போட்டு வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் மிக்சர் ஜாரில் சுக்கு,மிளகு,சீரகத்தை போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3.பிறகு இதை டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

4.அதில் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து இளஞ்சூட்டில் பருகினால் வாயுத் தொல்லை முழுமையாக குணமாகும்.