நாம் அனைவரும் சந்திக்கும் பெரிய பிரச்சனை மலச்சிக்கல்.இந்த பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:-
எலுமிச்சை சாறு
விளக்கெண்ணெய்
தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அதில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் கால் தேக்கரண்டி அளவிற்கு விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து ஒரு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதன் சாற்றை அதில் பிழிந்துவிட வேண்டும்.இந்த தண்ணீரை காலையில் எழுந்த பின்னர் பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
பால்
நெய்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் சிறிது சூடானதும் அதில் 5 மில்லி நெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை கிளாஸிற்கு ஊற்றி குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
தேவையான பொருட்கள்:-
ஏலக்காய் பொடி
மஞ்சள் தூள்
தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் கால் தேக்கரண்டி ஏலக்காய் பொடி போட்டுக் கொள்ள வேண்டும்.இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸிற்கு ஊற்றி பருகினால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.அதேபோல் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் பப்பாளி ஜூஸ் குடித்தால் மலம் இளகி வெளியேறும்.
ஒரு கிளாஸ் நீரில் சிறிது கல் உப்பு கலந்து பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.அதேபோல் வெது வெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் மலம் அடித்துக் கொண்டு வெளியேறும்.