சுகர் முதல் கண் வியாதி வரை அனைத்தையும் சரி செய்ய.. இந்த 1 காயில் டீ போட்டு குடியுங்கள்!! 

Photo of author

By Divya

சுகர் முதல் கண் வியாதி வரை அனைத்தையும் சரி செய்ய.. இந்த 1 காயில் டீ போட்டு குடியுங்கள்!!

கசப்பு சுவை நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடவது என்பது உங்களில் பலருக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கிறது.குறிப்பாக பாகற்காய் என்றால் சொல்லவே தேவையில்லை.குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பாகற்காய் என்றால் அலர்ஜி.ஆனால் பாகற்காயில் உள்ள சத்துக்கள் மற்றும் அதன் பயன்கள் தெரிந்தால் இனி அதை ஒதுக்கி வைக்கமாட்டீர்கள்.

பாகற்காயில் உள்ள சத்துக்கள்:-

வைட்டமின் பி,இரும்பு,ஜிங்க்,வைட்டமின் சி,பொட்டாசியம்,மாங்கனீஸ்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியிருக்கிறது.

பாகற்காயின் பயன்கள்:-

1)இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவுகிறது.

2)உடலில் படிந்து கிடக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

3)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

4)கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

5)கல்லீரலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்றி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

6)குடற் புழு பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் பாகற்காயை உணவில் சேர்த்து கொள்ளலாம்.பாகற்காய் பிடிக்காதவர்கள் அதில் தேநீர் செய்து அருந்தி வரலாம்.

தேவையான பொருட்கள்:-

1)பாகற்காய்
2)தேன்

செய்முறை:-

ஒரு பாகற்காயை எடுத்து இரண்டாக நறுக்கி அதனுள் இருக்கும் விதைகளை நீக்கி விடவும்.பின்னர் இதை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் நறுக்கி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து பாகற்காய் தேநீரை 5 நிமிடங்களுக்கு ஆற விடவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து அருந்தவும்.