மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்! 60 வயதில் எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த முதியவர்!!

Photo of author

By Sakthi

மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்! 60 வயதில் எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த முதியவர்!!

Sakthi

Updated on:

மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும்! 60 வயதில் எவரெஸ்ட் ஏறி சாதனை படைத்த முதியவர்!

மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக 60 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறி மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த முதியவர் சாதனை படைத்துள்ளார்.

கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே உள்ள அன்புக்கும் அன்யோன்யத்திற்கும் உதாரணமாக நாம் பல சம்பவங்களை பார்த்திருக்கிறோம்! கேட்டிருக்கிறோம்!படித்திருக்கிறோம்! இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஷரத் குல்கர்னி என்ற 60 வயது முதியவர் தன் வயதையும் பொருட்படுத்தாமல் மனைவியின் ஆசையை நிறைவேற்றுவதற்காக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார்.

மகார்ஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஷரத் குல்கர்னி அவர்களும் அவரது மனைவி அஞ்சலி அவர்களும் மலையேற்று வீரர்கள் ஆவர். இருவரும் உலகின் மிக உயரமான ஏழு சிகரங்களில் ஒன்றாக ஏறுவதற்கு முடிவு செய்து அதற்காக பயிற்சியும் எடுத்தனர்.

முதல் கட்டமாக 2019ம் ஆண்டு மே 22ம் தேதி ஷரத் குல்கர்னி அவர்களும் அவரது மனைவி அஞ்சலி அவர்களும் எவரெஸ்ட் சிகரம் ஏற தயாரானார்கள். இந்த எவரெஸ்ட் மலையேற்றம் அஞ்சலி அவர்களின் கடைசி மலையேற்றமாக உருவாகிப் போனது.

ஆம். இருவரும் எவரெஸ்ட் சிகரத்தில்  ஏறும் பொழுது கடும் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஷரத் குல்கர்னி அவர்களின் மனைவி அஞ்சலி உயிரிழந்தார். அஞ்சலி இறப்பதற்கு முன்னர்  எப்படியாவது சிகரத்தில் ஏறிவிட வேண்டும் என்று அஞ்சலி கூறியுள்ளார்.

எனவே மனைவியின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று மீண்டும் ஷரத் குல்கர்னி அவர்கள் எவரெஸ்ட் சிகரம் ஏற முடிவு செய்தார்.

அதன்படி மனைவி இறந்து நான்கு ஆண்டுகள் கழிந்து 60 வயதில் கடந்த மே மாதம் 23ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். 60 வயதில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த ஒரே இந்திய மலையேற்ற வீரர் ஷரத் குல்கர்னி என்பது குறிப்பிடத்தக்கது.