பாட்னா கலை நிகழ்ச்சியில் திடீரென்று துப்பாக்கி சூடு! படகாயம் அடைந்த போஜ்புரி பாடகி!!

0
187
#image_title

பாட்னா கலை நிகழ்ச்சியில் திடீரென்று துப்பாக்கி சூடு! படகாயம் அடைந்த போஜ்புரி பாடகி!

பாட்னாவில் நடந்த கலைநிகழ்ச்சி ஒன்றில் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் போஜ்புரி பாடகி படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தை சேர்ந்த பாடகி நிஷா உபாத்யாய் போஜ்புரி பாடகி ஆவார். இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் மேடை ஏறி பாடி வருகிறார்.

இந்நிலையில் பாடகி நிஷா அவர்கள் பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஆடிக்கொண்டே பாடல் பாடிக் கொண்டிருந்தார். அப்போது கலைநிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதில் பாடகி நிஷா மீது குண்டு பாய்ந்தது.

பாடகி நிஷா அவர்களின் இடது காலில் தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்து கீழே விழுந்தார். உடனே இங்கிருந்தவர்கள் பாடகி நிஷா அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பாடகி நிஷா அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து பாடகி நிஷா அவர்கள் இன்னும் எழுத்துப் பூர்வமான புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் துப்பாக்கி சூடு நடந்ததை பற்றி போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.