தேறாத உடலின் எடையும் அதிகரிக்க.. ஒரு கைப்பிடி வேர்க்கடலையை இப்படி சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

தேறாத உடலின் எடையும் அதிகரிக்க.. ஒரு கைப்பிடி வேர்க்கடலையை இப்படி சாப்பிடுங்கள்!!

Divya

உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வுகளில் ஒன்றை பின்பற்றுங்கள்.

தீர்வு 01:

வேர்க்கடலை

இந்த வேர்க்கடலையில் புரதம்,நார்ச்சத்து,பாஸ்பரஸ்,நியாசின்,தயாமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

வேர்கடலையை பச்சையாகவோ அல்லது வேகவைத்தோ சாப்பிட்டு வந்தால் இயற்கையான முறையில் உடல் எடை அதிகரிக்கும்.வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்பு உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

இது தவிர இதய ஆரோக்கியம்,இரத்த அழுத்தம்,செரிமானப் பிரச்சனை மற்றும் சருமம் சார்ந்த பிரச்சனைகளை வேர்க்கடலை தீர்க்கிறது.ஆனால் வேர்க்கடலை சாப்பிடுவதால் அலர்ஜி ஏற்படுபவர்கள் அதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

தீர்வு 02:

பால் மற்றும் பால் பொருட்கள்

நாம் தினசரி பயன்படுத்தும் பாலில் கால்சியம்,புரதம்,நல்ல கொழுப்பு உள்ளிட்டவை ஏராளமாக நிறைந்து காணப்படுகிறது.பால் மற்றும் பால் மூலம் தயாரிக்கப்படும் சீஸ்,நெய்,பனீர் போன்ற பொருட்கள் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க உதவுகிறது.

தினமும் ஏதேனும் ஒரு பால் பொருட்களை உட்கொண்டால் உடல் எடையில் நல்ல மாற்றத்தை உணரலாம்.பாலில் பாதாம் பருப்பு பொடி,முந்திரி பருப்பு பொடி அல்லது வேர்க்கடலை பருப்பு பொடி சேர்த்து பருகி வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

தீர்வு 03:

வெண்ணெய்

தயிர் இருந்து கிடைக்க கூடிய ஒரு பொருள் வெண்ணெய்.இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை ஆரோக்கியமாக முறையில் அதிகரிக்கும்.

தீர்வு 04:

நல்ல கொழுப்பு நிறைந்த உணவுப் பொருட்களை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.உலர் விதைகள் கொண்டு தயாரிக்கப்படும் வெண்ணையை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.

செவ்வாழை பழத்தை பொடியாக நறுக்கி பசும் பாலில் கலந்து பருகி வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.கொண்டைக்கடலை மற்றும் வேர்க்கடலையை பொடித்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.