மெலிந்த தேகம் கொளுகொளுன்னு மாற.. தேங்காய் பாலில் இந்த பழத்தை போட்டு குடிங்க!!

Photo of author

By Divya

மெலிந்த தேகம் கொளுகொளுன்னு மாற.. தேங்காய் பாலில் இந்த பழத்தை போட்டு குடிங்க!!

Divya

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை ஏறாமல் ஒல்லியாகவே இருப்பார்கள்.இப்படி உடல் எடையை அதிகப்படுத்த கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு சுலபமான வழிகள் இங்கு சொல்லப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் துருவல் – ஒரு கப்
2)செவ்வாழைப்பழம் – ஒன்று
3)தேன் – ஒரு தேக்கரண்டி
4)பிஸ்தா – ஐந்து
5)முந்திரி – ஐந்து

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு மூடி தேங்காயை துருவி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய் பால் ஒரு கப் அளவிற்கு இருக்க வேண்டும்.அடுத்து கனிந்த செவ்வாழைப்பழம் ஒன்றை எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தேங்காய் பாலில் போட்டுக் கொள்ளுங்கள்.

அடுத்து ஐந்து பிஸ்தா மற்றும் ஐந்து முந்திரி பருப்பை பொடியாக நறுக்கி தேங்காய் பாலில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை அதில் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.

இந்த தேங்காய் பாலை தினமும் ஒரு கிளாஸ் என்று குடித்து வந்தால் 30 தினங்களில் உங்கள் உடல் எடை வேகமாக அதிகரித்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)தேங்காய் பால் – ஒரு கப்
2)பாதாம் பருப்பு – 10
3)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

தேங்காய் துருவலை மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்து பால் எடுத்துக் கொள்ளுங்கள்.பின்னர் ஊறவைத்த பாதாம் பருப்பின் தோலை நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து தேங்காய் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பின்னர் அரைத்த பாதாம் பேஸ்ட்டை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.இந்த பாலில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகி வந்தால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.