1. பணவரவை ஏற்படுத்தும் அரிசி பரிகாரம்:
*பண பிரச்சனையை சந்திப்பவர்கள் அல்லது பர்ஸில் எப்போதும் பணம் இல்லாமல் இருப்பவர்கள், இந்த அரிசி பரிகாரத்தை செய்வது நல்லது. அதற்கு ஒரு சிவப்பு நிற துணியில் 21 அரிசியை வைத்து அதை பௌர்ணமி நாளில் சந்திரனின் ஒளிபடும் இடத்தில் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும்.
* பின்பு அதை ஒரு மூட்டையாக கட்டி பணம் வைக்கும் பர்ஸில் யாருடைய கண்ணிலும் படாத இடத்தில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் செலவு கட்டுப்படுத்தப்படுவதோடு சேமிப்பு அதிகரிக்கும் மற்றும் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும்.
2. கண் திருஷ்டி நீங்க:
*இந்த பரிகாரத்திற்கு கல் உப்பு, நல்லெண்ணெய், அகல் விளக்கு, பஞ்சு திரி ஆகியவை தேவைப்படும். கல் உப்பு கெட்ட சக்திகளை அழிக்கக்கூடிய பொருள்.
*பூஜை அறையில் ஒரு பித்தளை தட்டு வைத்து அதில் கல் உப்பு நிரப்பி கொள்ளவும். பிறகு அதன் மேல் ஒரு மண் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இவ்வாறு காலை மாலை என இரு வேளையும் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் கண் திருஷ்டி, பில்லி, சூனியம், ஏவல், தரித்திரம் ஆகிய அனைத்தும் நீங்கும்.
3. ஆன்மீக தகவல்கள்:
*கல் உப்பை பிளாஸ்டிக் டப்பாவிலோ அல்லது எவர் சில்வர் பாத்திரத்திலோ வைக்கக்கூடாது. அப்படி வைத்தால் தரித்திரத்தை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.
*கல் உப்பை சமைக்கும் போது நமது கைகளால் தான் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
*மேலும் மண் சட்டியில் வைப்பது மிகவும் சிறப்பை தரும்.
*உணவு உண்ணும் போதும், பரிமாறும் போதும் கைகளில் எடுத்து பயன்படுத்தக் கூடாது. மேலும் உப்பை நமது கைகளால் எடுத்து பிறருக்கு கொடுக்கக் கூடாது.
*வீட்டில் இருக்கக்கூடிய கழிவறையின் தரைத்தளம் வீட்டின் தரைதளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது.
*நாம் வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக திகழக்கூடிய மண், தண்ணீர், காற்று ஆகிய அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது துன்பங்களில் இருந்து விடுபட உதவும்.
*நமது வீட்டிற்கு தெய்வங்களை அழைப்பதற்காகவே காலையில் விளக்கேற்றுகிறோம். அந்த நேரங்களில் நோயாளிகள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களை தவிர வீட்டில் இருக்கும் வேறு யாரும் தூங்குவது முறையல்ல.
*குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காகவும், வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் அம்மனுக்கு பச்சை நிறத்தில் புடவையை சாற்றலாம்.
*செய்கின்ற வேலையை தக்க வைத்துக் கொள்ளவும், வேலையில் உயர் பதவிக்கு செல்ல வேண்டும் எனவும் நினைத்தால் அம்மனுக்கு ஆரஞ்சு நிறம் அல்லது வெளிர் சிவப்பு நிறத்தில் புடவையை சாற்றலாம்.
*ஆன்மீக படி உங்கள் வீட்டில் இருந்து ஆடை, ஆபரணங்கள், பொன் மற்றும் பொருள் முதலியவற்றை புதன்கிழமை அன்று யாருக்கும் கொடுக்கக் கூடாது. மீறி கொடுத்தால் உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி அடுத்தவரிடம் சென்று விடுவாள் என்று சாஸ்திரங்கள் கூறப்படுகிறது.