அனைத்து பருவ காலங்களிலும் சளி தொந்தரவு பாதிப்பு பொதுவான ஒரு பிரச்சனையாக இருக்கின்றது.இதில் இருந்து மீள ஓமம்,கற்பூரம் போன்றவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவிபிடிக்கலாம்.
தேவையான பொருட்கள்:-
1)ஓமம் – 10 கிராம்
2)கற்பூரம்(சூடம்) – ஒன்று
3)தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
பாத்திரம் ஒன்றில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் 10 கிராம் அளவிற்கு ஓமத்தை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
ஓமத் தண்ணீரை கொதிக்க வைத்த பிறகு ஒரு கற்பூரக் கட்டியை அதில் போட்டு கரைய வைக்க வேண்டும்.பின்னர் இதை ஆவிபிடிக்க வேண்டும்.இப்படி காலை,மாலை என்று இரு நேரத்தில் ஆவி பிடித்தால் மூக்கடைப்பு குணமாகும்.
தேவையான பொருட்கள்:-
1)புதினா – 10
2)கற்பூரம் – ஒன்று
3)தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் 10 புதினா இலைகளை போட வேண்டும்.பின்னர் அதில் ஒரு கற்பூரத்தை போட்டுக் கொள்ள வேண்டும்.
இவை இரண்டும் கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த நீரை ஆவிபிடித்தால் மூக்கடைப்பு பாதிப்பு குணமாகும்.அதேபோல் கொத்தமல்லி விதையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் மூக்கடைப்பு,மூக்கில் நீர் ஒழுகுதல் பிரச்சனை சரியாகும்.
சுக்கு,கொத்தமல்லி விதையை கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை பருகினால் மூக்கடைப்பு பாதிப்பு குணமாகும்.வெந்நீரை கொண்டு மூக்கு அருகில் அழுத்தம் கொடுத்தால் சளி கரைந்து வந்துவிடும்.