புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க கருப்பு உளுந்து பரிகாரம் செய்யுங்கள்!

Photo of author

By Divya

புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க கருப்பு உளுந்து பரிகாரம் செய்யுங்கள்!

ஜாதகப்படி ஒருவருக்கு ராகு பாதகமாக இருந்தால் அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இந்த ராகு பகவானால் ஏற்படும் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாக கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை 9 தினங்கள் செய்து வர வேண்டும்.

இதற்கு முதலில் ஒரு கைப்படி அளவு கருப்பு உளுந்து எடுத்துக் கொள்ளவும். அடுத்து ஒரு வெள்ளை காட்டன் துணியை ஒன்பது பிட்டாக கட் செய்து கொள்ளவும். ஒவ்வொரு துணியிலும் கருப்பு உளுந்து நிரப்பி மூட்டை கட்டிக் கொள்ளவும்.

இந்த ஒன்பது மூட்டைகளையும் வீட்டு பூஜை அறையில் வைத்து குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும்.

இந்த ஒன்பது கருப்பு உளுந்து மூட்டையில் ஒரு மூட்டையை மட்டும் எடுத்து கணவன் மனைவி தூங்கும் படுக்கை அறைக்கு எடுத்து சென்று தலையணைக்கு அடியில் வைத்து விடவும்.

மறுநாள் காலையில் அந்த மூட்டையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு ஒரு இடத்தில் வைத்து விடவும்.

மீதமுள்ள எட்டு மூட்டைகளை எட்டு தினங்களுக்கு இவ்வாறு செய்த பின்னர் அனைத்து மூட்டைகளையும் பூஜை அறையில் ஒரு சேர வைத்து குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் அந்த ஒன்பது மூட்டைகளையும் போட்டு விடவும். இவ்வாறு செய்தால் புத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் உண்டாகும்.