குண்டு வயிறு சிக்குன்னு மாற.. காலையில் இந்த ஒரு டீ செய்து குடிங்க!!

Photo of author

By Divya

குண்டு வயிறு சிக்குன்னு மாற.. காலையில் இந்த ஒரு டீ செய்து குடிங்க!!

Divya

நமது உடலில் வயிற்றுப் பகுதியில்தான் அதிக கெட்ட கொழுப்பு சேர்கிறது.இந்த தேவையற்ற கொழுப்பை கரைக்க வெள்ளைப்பூண்டு டீ செய்து குடிக்கலாம்.பூண்டு பற்களில் இருக்கின்ற ஊட்டச்சத்துக்கள் வயிற்றுக் கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளைப்பூண்டு பல்
2)நல்லெண்ணெய்
3)ஆப்பிள் சீடர் வினிகர்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு இடித்த பூண்டு பல்லை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.பூண்டு நீர் நன்றாக கொதித்து வந்ததும் இதனை கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

பிறகு அதில் நான்கு அல்லது ஐந்து துளிகள் நல்லெண்ணெய் கலக்க வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து பருகினால் வயிற்றுக் கொழுப்பு கரைந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பற்கள்
2)எலுமிச்சை சாறு
3)தண்ணீர்

செய்முறை விளக்கம்:-

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து இரண்டு பூண்டு பற்களை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த பூண்டு பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் வயிற்றுத் தொப்பை கரையும்.

தேவையான பொருட்கள்:-

1)பூண்டு பல்
2)தேன்

செய்முறை விளக்கம்:-

முதலில் இரண்டு பூண்டு பற்களை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.இதை பாத்திரத்தில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் வயிற்றுக் கொழுப்பு கரையும்.