பற்களில் மஞ்சள் கறை தென்படுதா? டோன்ட் பீல்.. இந்த ஒரு பொருளை வைத்து டக்குனு நீக்கிவிடலாம்!!

Photo of author

By Divya

பற்களில் மஞ்சள் கறை இருந்தால் பார்க்கவே அசிங்கமாக இருக்கும்.உண்ணும் உணவுப் பொருட்கள் பற்களின் இடுக்குகளில் தங்கி நாளடைவில் கறைகளாக உருவாகிவிடுகிறது.டூத் பேஸ்ட்டில் பற்களை துலக்குவதால் மட்டும் இந்த கறைகள் எளிதில் நீங்கிவிடாது.பற்களில் காணப்படும் மஞ்சள் கறைகளை நீக்க வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)ஆரஞ்சு பழ தோல்
2)எலுமிச்சை தோல்
3)இந்துப்பு
4)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஒரு கப் ஆரஞ்சு பழ தோல் மற்றும் ஒரு கப் எலுமிச்சை பழ தோலை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு தேக்கரண்டி இந்துப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

அரைத்த பொருட்களை ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு டப்பாவில் கொட்டிக் கொள்ளவும்.பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.அடுத்து ஒரு தேக்கரண்டி அளவு அரைத்து வைத்திருக்கும் பொடியை அதில் மிக்ஸ் செய்து பற்களை துலக்கவும்.

இப்படி தினமும் பற்களை சுத்தம் செய்து வந்தால் மஞ்சள் கறைகள் நீங்கி வெண்மையாகும்.

பல் மஞ்சள் கறையை நீக்க மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)பேக்கிங் சோடா
2)தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 10 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.பிறகு ஒரு தேக்கரண்டி பேக்கிங் சோடாவை அதில் சேர்த்து பேஸ்ட்டாகவும்.இதை பயன்படுத்தி பற்களை துலக்கினால் மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.அதேபோல் கல் உப்பை நீரில் கலந்து பற்களை சுத்தம் செய்து வந்தால் கறைகள்,அழுக்குகள் நீங்கிவிடும்.உணவு உட்கொண்ட பிறகு வெந்நீரில் வாயை கொப்பளித்து வந்தால் பல் இடுக்குகளில் உணவுத் துகள்கள் மற்றும் அழுக்குகள் சேர்வது தடுக்கப்படும்.