சிவனின் அருள் கிடைக்க, சிவனின் இந்த மந்திரங்களை தினமும் கூறுங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

Photo of author

By Janani

சிவனின் அருள் கிடைக்க, சிவனின் இந்த மந்திரங்களை தினமும் கூறுங்கள்..!! வாழ்க்கையே மாறும்..!!

Janani

படைத்தல், காத்தல், அழித்தல் என்று மூன்று தொழில்களை செய்வது இறைவன் என்பார்கள். இறைவனுக்கு உரிய தொழில்கள் ஐந்து என்றும் சில புராணங்கள் சொல்கின்றன. படைத்தல், காத்தல், அழித்தல் மட்டுமின்றி மறைத்தல், அருளலும் இறை பணிகளாக சொல்லப்படுகின்றன.

இந்து மத கோட்பாடுகளின் படி சிவ பெருமான் அழித்தல் தொழிலை செய்யக் கூடியவர் என குறிப்பிடப்படுவதால் சிவனை வணங்க பலர் தயக்கம் காட்டுவதும் உண்டு. ஆனால் சிவ பெருமான் பாவங்களை, தீமைகளை அழிக்கக் கூடியவர் ஆவார். அவர் கருணையின் வடிவமாக திகழக் கூடியவர். சிவனை உலகத்தவர்கள் பலவிதங்களில் வழிபடுகின்றனர். எளிதில் அருள் செய்து வரங்கள் அருளக் கூடியவர்.

“ஓம் நம சிவாயா” என்றால், “சிவன் எனும் தெய்வத்திற்கு நமஸ்காரம்” என்று பொருள்படும். இந்த மந்திரம், சிவபெருமானின் அருளைப் பெற மிகவும் சிறந்த வழி என போதிக்கப்பட்டுள்ளது. இது மிக எளிதானதும், பல அற்புதமான பலன்களை அளிக்கும் மந்திரமாகும்.

வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு சிவபெருமானை மனதார நினைத்துக் கொண்டு, ஒரே ஒரு முறை மட்டும் அவரை நினைத்து கூறினால் போதும், அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மேலும் நாம் என்ன வேண்டுதல் முன்வைத்து இந்த மந்திரத்தை கூறுகிறோமோ அந்த வேண்டுதலும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

அதேபோன்று தினமும் காலையில் எழுந்தது முதல் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கு முன்பும், சிவனின் மந்திரத்தை கூறும் பொழுது சிவனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

1.காலையில் எழுந்ததும் சொல்ல வேண்டிய மந்திரம் :
“அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணார் அமுதக் கடலே போற்றி”

2.குளிக்கும் போது சொல்ல வேண்டியது:
“சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி”

3.கோபுர தரிசனம் காணும் போது சொல்ல வேண்டியது:
“தென்னாடுடைய சிவனே போற்றி; எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

4.வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது சொல்ல வேண்டியது :
“காவாய் கனகக் குன்றே போற்றி ஆவா எந்தனக்கு அருளாய் போற்றி”

5.நண்பரைக் காணும் போது சொல்ல வேண்டியது :
“தோழா போற்றி துணைவா போற்றி”

6.வீட்டின் கதவை திறக்கும் போது சொல்ல வேண்டியது :
“வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி”

7.நிலத்தில் அமரும் போது சொல்ல வேண்டியது :
“பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி”

8.நீர் அருந்தும் போது சொல்ல வேண்டியது :
“நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி”

9.அடுப்பு பற்ற வைக்கும் போது சொல்ல வேண்டியது :
“தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி”

10.உணவு உண்ணும் போது சொல்ல வேண்டியது :
“தென்தில்லை மன்றினுள்
ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி”

11.மனதில் அச்சம் ஏற்படும் போது சொல்ல வேண்டியது :
“அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி”

12.உறங்கும் போது சொல்ல வேண்டியது :
“ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி”