சாம்பார்,குருமா போன்றவற்றில் சேர்க்கப்படும் காய்தான் சாம்பல் பூசணி அதாவது வெண்பூசணி.இந்த காய் அதிக நீர்ச்சத்து நிறைந்த வகையை சார்ந்தது.வெண் பூசணி காயில் ஜூஸ் செய்து பருகி வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
சாம்பல் பூசணி ஊட்டசத்துக்கள்:
1.பாஸ்பரஸ்
2.கால்சியம்
3.பொட்டாசியம்
4.இரும்பு
5.வைட்டமின் சி
6.வைட்டமின் பி
7.நார்ச்சத்து
சாம்பல் பூசணி ஜூஸ் செய்வது எப்படி?
முதலில் ஒரு கீற்று சாம்பல் பூசணி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாம்பல் பூசணி ஜூஸை தினமும் காலை பொழுதில் பருக வேண்டும்.சாம்பல் பூசணி விதைகள் முற்றி இருந்தால் அவற்றை நீக்கிவிடலாம்.
சாம்பல் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய பலன்கள்:
1.உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள சாம்பல் பூசணி சாறு பருகலாம்.சாம்பல் பூசணி சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
2.சாம்பல் பூசணி ஜூஸ் பருகினால் அல்சர் புண்கள் சீக்கிரம் குணமாகும்.வயிற்றுப்புண்,வாய்ப்புண் குணமாக சாம்பல் பூசணி சாறு குடிக்கலாம்.
3.இரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற சாம்பல் பூசணி சாறு தயாரித்து பருகலாம்.அசிடிட்டி பாதிப்பை குணப்படுத்திக் கொள்ள சாம்பல் பூசணி ஜூஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.
4.வயிற்றில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேற வெண்பூசணி ஜூஸ் செய்து பருகலாம்.ஆசனவாய் அரிப்பு,எரிச்சல் குணமாக சாம்பல் பூசணி ஜூஸ் குடிக்கலாம்.
5.சருமம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாக இந்த காயை அரைத்து குடிக்கலாம்.சருமத்தில் ஈரப்பதம் தக்க வைக்க இந்த காய் உதவுகிறது.
6.உடலிலுள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வெண் பூசணி சாறு தாயரித்து குடிக்கலாம்.
7.உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை அதிகரிக்க சாம்பல் பூசணி சாறு குடிக்கலாம்.இந்த காய் சாறில் தேன் கலந்து குடித்தால் இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்கிவிடும்.
8.சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமாக வெண்பூசணி ஜூஸ் செய்து குடிக்கலாம்.
9.மலச்சிக்கல் பிரச்சனை சரியாக வெண்பூசணயில் ஜூஸ் செய்து தினமும் ஒரு கிளாஸ் குடிக்கலாம்.இதில் இருக்கின்ற நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்துகிறது.
10.வெண்பூசணி காய் ஜூஸை பருகி வந்தால் செரிமானப் பிரச்சனை முழுமையாக குணமாகும்.