இந்த 10 ஆரோக்கிய நன்மைகளை பெற.. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிங்க!!

Photo of author

By Divya

இந்த 10 ஆரோக்கிய நன்மைகளை பெற.. காலையில் எழுந்ததும் முதல் வேலையாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிங்க!!

Divya

உடல் இயக்கம் சீராக இருக்க தண்ணீர் அவசியமான ஒன்றாகும்.மனித உடல் தண்ணீரால் நிரம்பியவையாகும்.அப்படி இருக்கையில் உடலில் நீர்ச்சத்து குறைந்தால் உடல் ஆரோக்கியம் முழுமையாக பாதிக்கப்பட்டுவிடும்.

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைவலி,உடல் வறட்சி,சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.எனவே தினமும் 8 கிளாஸ் அளவிற்கு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைத்துவிடும்.

தண்ணீரில் தாதுக்கள்,வைட்டமின்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் பருகினால் உடலுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும்.

தினமும் காலையில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்:

1)குடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கழிவுகளை அகற்றும் வேலையை தண்ணீர் செய்கிறது.

2)மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்ய தினசரி எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

3)தினமும் காலையில் தண்ணீர் பருகுவதால் மன அழுத்தம் கட்டுப்படும்.உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை தண்ணீர் பருகுவதன் மூலம் குறைக்க முடியும்.

4)தொப்பை இருப்பவர்கள் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகி வந்தால் அவை சீக்கிரம் குறைந்துவிடும்.

5)தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

6)சருமம் சம்மந்தபட்ட அனைத்து பிரச்சனைகளும் தண்ணீர் குடிப்பதன் மூலம் சரியாகும்.

7)தினமும் காலையில் தண்ணீர் குடிப்பதால் மூளை ஆரோக்கியம் மேம்படும்.

8)உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தினமும் காலையில் தண்ணீர் பருக வேண்டும்.

9)குடல் ஆரோக்கியம் மேம்பட காலை நேரத்தில் தண்ணீர் பருக வேண்டும்.உடல் எடை குறைய காலை நேரத்தில் தண்ணீர் பருக வேண்டும்.

10)உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள தினமும் தண்ணீர் பருக வேண்டும்.கண் சம்மந்தபட்ட பிரச்சனைகள்,உடல் சூடு போன்றவை சரியாக காலை நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்.