நாம் பயன்படுத்தி வரும் பூசணி விதையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.பூசணி காய் பிடிக்காதவர்கள் அதன் விதையை சாப்பிட்டு வந்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.பூசணி விதை ஆண்களின் விந்தணு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
பூசணி விதையில் ஜிங்க்,மெக்னீசியம்,நல்ல கொழுப்புகள் அதிகமாக நிறைந்து காணப்படுகிறது.இந்த பூசணி விதையை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பூசணி விதை நன்மைகள்:-
1)தினமும் பூசணி விதையை வறுத்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.இதில் இருக்கின்ற மெக்னீசியம் சத்து எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
2)பூசணி விதையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படும்.தினமும் பூசணி விதை பொடியை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவு குறையும்.
3)பூசணி விதையில் இருக்கின்ற மெக்னீசியம் சத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.இதயத் துடிப்பு சீராக இருக்க பூசணி விதையை உட்கொள்ளலாம்.
4)உடலில் படியும் தேவையற்ற கொழுப்பை கரைக்க பூசணி விதையை வறுத்து சாப்பிடலாம்.தினமும் இரவு நேரத்தில் நேரத்தில் ஒரு ஸ்பூன் பூசணி விதை சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கத்தை அனுபவிக்கலாம்.
5)தினமும் பூசணி விதை பொடியை பாலில் கலந்து குடித்து வந்தால் விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.ஆண்கள் மலட்டு தன்மை பாதிப்பில் இருந்து மீள பூசணி விதையை சாப்பிடலாம்.
6)ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்த பூசணி விதையை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
7)உடல் சூடு தணிய தினமும் ஒரு தேக்கரண்டி பூசணி விதையை வறுத்து சாப்பிடலாம்.கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைக்க இந்த பூசணி விதையை சாப்பிடலாம்.