தங்கள் பாலியல் வாழ்க்கையை ஆரோக்கியமாக வைக்க விரும்பும் ஆண்கள் இங்கு சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை தினமும் இரவு நேரத்தில் பின்பற்ற வேண்டும்.உடலுறவின் போது சோர்வு மற்றும் சலிப்பை உணரும் ஆண்களுக்கு இந்த குறிப்பு நிச்சயம் பயன் தரும்.
தேவையான பொருட்கள்:
1)வெள்ளை பூண்டு பற்கள் – இரண்டு
2)பசு நெய் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
செய்முறை 01:
முதலில் நீங்கள் நல்ல பெருத்த வெள்ளை பூண்டு பற்கள் இரண்டு என்ற எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை 02:
அதன் பிறகு வெள்ளை பூண்டின் தோலை உரித்து அப்புறப்புடுத்திவிட வேண்டும்.பின்னர் வெள்ளை பூண்டை தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை 03:
பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து ஒரு தேக்கரண்டி அளவு பசு நெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.நெய் உருகி வந்ததும் நறுக்கி வைத்துள்ள பூண்டு துண்டுகளை போட்டு மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.
செய்முறை 04:
பூண்டு நன்கு வறுபட்ட பிறகு அடுப்பை அணைத்துவிட வேண்டும்.இந்த பூண்டு பற்களை ஆறவைத்து சாப்பிடலாம்.அல்லது பசும் பாலில் இந்த வறுத்த பூண்டு பற்களை போட்டு கொதிக்க வைத்து தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம்.
இவ்வாறு பூண்டு பற்களை சாப்பிட்டால் உடலுக்கு குதிரை பலம் கிடைக்கும்.உடலுறவிற்கு பிறகு சோர்வை உணரும் ஆண்கள் நெயில் பூண்டை வறுத்து சாப்பிட்டு வந்தால் சோர்வின்றி அதிக நேரம் உடலுறவு வைத்துக் கொள்ள முடியும்.
நெயில் வறுத்த பூண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.மூட்டு வலி பாதிப்பால் அவதியடைந்து வருபவர்கள் இந்த பூண்டு பற்களை சாப்பிட்டு தீர்வு பெறலாம்.உடலில் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க பூண்டு பற்களை சாப்பிடலாம்.
இதயம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் நெயில் வறுத்த பூண்டு பற்களை சாப்பிட்டு வந்தால் உரிய பலன் கிடைக்கும்.