உடல் சோர்வாகாமல் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள.. இந்த 3 பொருட்களை அரைத்து பாலில் கலந்து குடியுங்கள்!!

Photo of author

By Divya

உடல் சோர்வாகாமல் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள.. இந்த 3 பொருட்களை அரைத்து பாலில் கலந்து குடியுங்கள்!!

ஆண்,பெண் அனைவரும் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட,உடலுறவின் போது சோர்வு ஏற்படாமல் இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

தேவையான பொருட்கள்:-

1)மரவள்ளி கிழங்கு துண்டுகள் – 50 கிராம்

2)பனங்கிழங்கு துண்டுகள் – 50 கிராம்

3)ஜாதிக்காய் – 50 கிராம்

4)பால் – 1 கிளாஸ்

5)தேன் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் மரவள்ளி கிழங்கின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் போட்டு நன்கு காயவைத்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அதேபோல் பனங்கிழங்கை தோல் நீக்கி இட்லி பாத்திரத்தில் போட்டு வேகவைக்கவும்.பின்னர் அதை நன்கு காய வைத்து அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து 50 கிராம் அளவு ஜாதிக்காய் போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுத்து ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.

மரவள்ளி கிழங்கு பொடி,பனங்கிழங்கு பொடி மற்றும் ஜாதிக்காய் பொடி ஆகிய மூன்றையும் ஒன்றாக மிக்ஸ் செய்து ஒரு ஈரமில்லாத டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/4 கிளாஸ் தண்ணீர் சேர்க்காத பால் ஊற்றி சூடாக்கவும்.

அதன் பின்னர் அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் சேர்த்து நன்கு கலந்து விடவும்.இதை ஒரு நிமிடம் வரை கொதிக்க விட்டு ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியும்.உடலுறவின் போது சோர்வு ஏற்படாமல் துணையை நீண்ட நேர உடலுறவின் மூலம் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)பாதாம் பருப்பு
2)வாழைப்பழம்
3)பால்
4)தேன்

செய்முறை:-

ஒரு வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதன் பின்னர் 10 கிராம் பாதாம் பருப்பை வாணலியில் போட்டு வறுத்து பவுடராக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் அரைத்த பாதாம் பருப்பு பொடி சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி நறுக்கிய வாழைப்பழ துண்டுகள் மற்றும் தேவையான அளவு தேன் சேர்த்து இரவு நேரத்தில் அருந்த வேண்டும்.இவ்வாறு செய்தால் உடலுறவின் போது ஏற்படும் சோர்வு நீங்கி நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும்.