மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க நினைவாற்றலை பெருக்க பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்.இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மூளை ஆரோக்யத்தை மேம்படுத்த உதவுகிறது.பாதாம் பருப்பை பொடித்து பாலில் கலந்து குடித்தால் ஞாபக சக்தி பன்மடங்கு அதிகரிக்கும்.
ஞாபகத் திறனை அதிகரிக்கும் ஊட்டச்சத்து பால்:
தேவைப்படும் பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு – 10
2)பால் – ஒரு கிளாஸ்
3)பனங்கற்கண்டு – தேவையான அளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் பத்து பாதாம் பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக ஊறவைக்க வேண்டும்.பிறகு பாதாம் பருப்பை தோல் நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்ற வேண்டும்.பின்னர் பாதாம் பேஸ்டை அதில் போட்டு மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த பாதாம் பாலை கிளாஸிற்கு ஊற்றி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
பாதாம் பால் குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.பாதாம் பருப்பு பொடி சாப்பிட்டால் மூளை செயல்திறன் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பாதாம் பருப்பு – 10
2)வால்நட் – 10
3)பசும் பால் – ஒரு கிளாஸ்
4)கற்கண்டு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் பத்து பாதாம் பருப்பு மற்றும் வால்நட்டை வாணலியில் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு அரைத்த பொடியை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடித்து தேவையான அளவு கற்கண்டு சேர்த்து குடித்தால் ஞாபகத் திறன் அதிகரிக்கும்.