இயற்கை முறையில் கருத்தரிக்க பெண்கள் தங்கள் கருமுட்டையை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது முக்கியம்.ஆனால் இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு கருமுட்டை வளர்ச்சி குறைவாக மற்றும் பலவீனமாக காணப்படுகிறது.இதனால் அவர்களால் எளிதில் கருத்தரிக்க முடியாமல் போகிறது.
தற்பொழுது செயற்கை கருத்தரித்தல் மூலமே குழந்தை பெற்றெடுப்பது அதிகரித்து வருகிறது.இதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்.பெண்கள் தங்கள் கருப்பை மற்றும் கருமுட்டை ஆரோக்கியத்தை மேம்படுத்த இங்கு கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
கருமுட்டை தரத்தை அதிகரிக்கும் ஐந்து உணவுகள்:-
1)வால்நட் ஒமேகா மற்றும் 3 கொழுப்பு அமிலம்
2)ஆளிவிதை
3)பழங்கள்
4)முருங்கை காய்
5)முருங்கை பூ
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் கருமுட்டை ஆரோக்கியம் மேம்படும்.வால்நட்,சால்மன்,பாதாம் பருப்பு,அவகேடோ போன்ற உணவுப் பொருட்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்திருக்கிறது.உலர் விதைகளை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் கருமுட்டை ஆரோக்கியம் மேம்படும்.
ஆளிவிதையை ஊறவைத்து அல்லது பொடித்து சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் கருமுட்டை ஆரோக்கியம் மேம்படும்.பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொண்டு வந்தால் தரமான கருமுட்டை வளர்ச்சி இருக்கும்.
முருங்கை காய் மற்றும் முருங்கை பூவை உலர்த்தி பொடித்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருமுட்டை ஆரோக்கியம் மேம்படும்.பருப்பு வகைகளை வறுத்து சாப்பிட்டு வந்தால் கருப்பை ஆரோக்கியம் மேம்படும்.முருங்கை பூவை தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும்.
கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.பூசணி விதை,முட்டை,கோழி இறைச்சி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும்.