மெலிந்த உடலமைப்பு கொண்டவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளை தொடர்ச்சியாக பின்பற்றி உடல் எடையை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள்.
தீர்வு 01:
நிலப்பனங்கிழங்கு பொடி – ஒரு தேக்கரண்டி
பால் – ஒரு கிளாஸ்
நான்கு அல்லது ஐந்து நிலபனங்கிழங்கை வேகவைத்து வெயிலில் நன்றாக காய வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இந்த கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் அளவிற்கு பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பின்னர் அரைத்த நிலப் பனங்கிழங்கு பொடி ஒரு தேக்கரண்டி அளவு அதில் கொட்டி காய்ச்சி குடித்து வந்தால் தசைகள் வலிமையாகும்.உடல் எடை இயற்கையான முறையில் அதிகரிக்கும்.
தீர்வு 02:
முளைக்கட்டிய உளுந்து – 25 கிராம்
வெல்லம் – சிறிதளவு
முதலில் கருப்பு உளுந்தை தண்ணீரில் கொட்டி நான்கு முதல் ஐந்து மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.அதன் பிறகு இந்த உளுந்தை ஒரு காட்டன் துணியில் போட்டு மூட்டை கட்டி முளைகட்ட வேண்டும்.
உளுந்து முளைவிட்டு வந்த பின்னர் மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் போல் அரைக்க வேண்டும்.அடுத்து இதில் சிறிதளவு வெல்லம் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
தீர்வு 03:
கருப்பு எள் – இரண்டு தேக்கரண்டி
வெல்லம் – இரண்டு தேக்கரண்டி
முதலில் வாணலி ஒன்றில் கருப்பு எள்ளை கொட்டி லேசாக வறுக்க வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு வெல்லத்தை பொடித்து இந்த எள்ளு பொடியில் போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை உருண்டை பிடித்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.