நமது உடலில் வளர்சிதை மாற்றம் அதாவது மெட்டபாலிசம் சரியாக நடக்கவில்லை என்றால் பல பாதிப்புகள் ஏற்படும்.உடலில் மெட்டபாலிசம் அதிகமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.வளர்சிதை மாற்றம் அதிகமாக இருந்தால் தான் நாம் சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானமாகும்.
இந்த மெட்டபாலிசம் உணவுகளை செரித்து அதில் இருக்கின்ற கலோரிகளை நமக்கு ஆற்றலாக கொடுக்கிறது.உடல் எடையை குறைக்க உள்ளவர்களுக்கு மெட்டபாலிசம் அதிகமாக தேவைப்படுகிறது.
உடலில் மெட்டபாலிசம் அளவை அதிகரிக்கும் உணவுகள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.இந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வளர்சிதை மாற்ற குறைபாட்டை தடுக்கலாம்.
மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் உணவுகள்:
1)உலர் விதைகள்
பாதாம் பருப்பு,முந்திரி,பிஸ்தா போன்ற உலர் விதைகளை உட்கொண்டால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்.
2)பீன்ஸ் உணவுகள்
இதில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இந்த பீன்ஸ் உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் மெட்டபாலிசம் அளவு அதிகரிக்கும்.எனவே தினசரி உணவில் சிறிது பீன்ஸ் சேர்த்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.
3)ஓட்ஸ்
இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.ஓட்ஸ் உணவுகள் உடல் எடையை குறைப்பதோடு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
4)சிட்ரஸ் பழங்கள்
தினமும் ஓரு சிட்ரஸ் பழத்தில் ஜூஸ் செய்து பருகி வந்தால் உங்கள் உடலில் வளர்சிதை மாற்ற அளவு அதிகரிக்கும்.
5)பட்டை
மெட்டபாலிசம் குறைவாக இருப்பவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் பட்டை தேநீர் செய்து பருகுங்கள்.
6)பூண்டு
ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பூண்டு பற்களை தினமும் சாப்பிட்டு வந்தால் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.அதேபோல் வேகவைத்த முட்டை சாப்பிடுவதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம்.