நரம்பு வலிமை அதிகரிக்க.. இந்த இலையை நீரில் கொதிக்க வைத்து ஒரு வாரம் குடிங்க!!

Photo of author

By Divya

நரம்பு வலிமை அதிகரிக்க.. இந்த இலையை நீரில் கொதிக்க வைத்து ஒரு வாரம் குடிங்க!!

Divya

உடல் ஆரோக்கியத்தை பேணி காக்க வில்வ இலையை மருந்தாக உட்கொள்ளலாம்.வில்வ இலையில் பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து,புரோட்டின் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.வில்வ மரத்தில் இருந்து கிடைக்க கூடிய இலை,பழம்,பூ,வேர் அனைத்திலும் ஆரோக்கிய பலன்கள் நிறைந்துள்ளன.

வில்வ இலை ஆன்மீகத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.வில்வ இலை துவர்ப்பு சத்து நிறைந்தவையாகும்.இந்த இலையை ஒரு கிளாஸ் தண்ணீர் கொதிக்க வைத்து டீ போன்று குடித்து குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து தேன் சேர்த்து சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.வில்வ இலை பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.வில்வ இலையை அரைத்து கஷாயம் போல் காய்ச்சி குடித்தால் நரம்பு வலிமை அதிகரிக்கும்.

உடல் கொழுப்புகளை கரைக்க வில்வ இலையை அரைத்து சாறு எடுத்து மிளகுத் கலந்து உட்கொள்ளலாம்.வில்வ இலை பானம் குடிப்பதால் உடல் குளிர்ச்சியாகும்.வில்வ இலையை பொடித்து காலையில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரத்த சர்க்கரை நோய் கட்டுப்படும்.

வில்வ இலையை வதக்கி புண்கள் மீது வைத்து காட்டினால் அவை சீக்கிரம் ஆறும்.தலைவலி குணமாக வில்வ இலையை அரைத்து நெற்றி மீது பூசலாம்.வில்வ இலையில் டீ போட்டு குடித்தால் கண் ஆரோக்கியம் மேம்படும்.

இரத்த சோகை பாதிப்பு குணமாக வில்வ இலையில் தேநீர் செய்து குடிக்கலாம்.வில்வ இலையை நீர்விட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பின்னர் இதை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து குடிப்பதால் மேக நோய் குணமாகும்.வில்வ இலை தேநீர் செய்து குடித்து வந்தால் மதுப்பழக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்.