தம்பதிகள் தங்கள் தாம்பத்திய உறவை வலுப்படுத்த கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தில் ஒன்றை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)தர்பூசணி துண்டுகள் – ஒரு கப்
2)எலுமிச்சை – ஒன்று
3)இஞ்சி துண்டு – ஒன்று
செய்முறை விளக்கம்:-
தர்பூசணி கீற்றை தோல் மற்றும் விதை நீக்கிவிட்டு அதன் சதை பற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து ஒரு சிறிய அளவு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் சாறை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள்.அடுத்து மிக்சர் ஜாரை எடுத்து தர்பூசணி துண்டுகளை முதலில் சேருங்கள்.
அடுத்து தோல் நீக்கி வைத்துள்ள இஞ்சி துண்டை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இந்த ஜூஸை ஒரு கிளாஸிற்கு ஊற்றி பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து பருக வேண்டும்.
இந்த பானம் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது.அதோடு உடலை வலுவாக்கவும் இந்த இந்த பானத்தை பருகலாம்.
தேவையான பொருட்கள்:-
1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)ஜாதிக்காய் தூள் – 10 கிராம்
3)கசகசா – கால் தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:-
ஜாதிக்காயை இடித்து தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பால் நன்கு சூடானதும் அரைத்த ஜாதிக்காய் பொடியை அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு கால் தேக்கரண்டி கசகாவை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைத்து பருகி வந்தால் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)வெண்பூசணி துண்டுகள் – அரை கப்
2)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
3)இஞ்சி – ஒரு பீஸ்
செய்முறை விளக்கம்:-
வெண்பூசணி அதாவது சாம்பார் பூசணிக்காயை தோல் சீவிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் இருந்து சாறு பிழிந்து கொள்ள வேண்டும்.பிறகு ஒரு பீஸ் இஞ்சியை தோல் நீக்கிவிட வேண்டும்.
இப்பொழுது மிக்சர் ஜாரில் வெண்பூசணி துண்டுகளை போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து இஞ்சி துண்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பானத்தில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடபட முடியும்.