விந்து உற்பத்தி அதிகரிக்க.. தினமும் இந்த ஒரு நட்ஸ் மட்டும் சாப்பிடுங்கள் போதும்!!

Photo of author

By Rupa

 

தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் பெரும்பாலான ஆண்கள் ஆண்மை குறைபாட்டிற்கு ஆளாகி வருகின்றனர்.குறைவான விந்து வெளியேறுதல்,நீர்த்த விந்து வெளியேறுதல்,பாலியல் ஈர்ப்பு குறைதல்,மலட்டு தன்மை,விதைப்பை வீக்கம்,உடல் சோர்வு,நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பாதிப்புகளால் ஆண்களின் இல்லற வாழ்க்கை மோசமாக இருக்கிறது.

இதனால் குழந்தை பிறப்பில் தாமதம்,குழந்தை பிறப்பு குறைதல் போன்றவை அதிகரித்து வருகிறது.எனவே ஆரோக்கியமான முறையில் விந்து உற்பத்தியை அதிகரிக்க இயற்கை வழியில் தீர்வு காணுங்கள்.

விந்து உற்பத்தியை அதிகரிக்க வால்நட் பெரிதும் உதவியாக இருக்கிறது.வால்நட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்,ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்,நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.

இது விந்தணுக்களின் எண்ணிகையை அதிகரிப்பதோடு,மலட்டு தன்மையை போக்க உதவுகிறது.வால்நட்டை உட்கொள்வதன் மூலம் விந்தணுக்களின் எண்ணிகையை அதிகரிக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் விந்தணுக்களின் உற்பத்தி அதிகமாகும்.

1)வால்நட்
2)பால்
3)பேரிச்சம் பழம்
4)தேன்

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 150 மில்லி அளவு நாட்டு மாட்டு பால் சேர்த்து சூடாக்கவும்.

மற்றொரு அடுப்பில் வாணலி வைத்து இரண்டு வால்நட்டை போட்டு லேசாக வறுத்தெடுக்கவும்.இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தூளாக்கி கொதிக்கும் பாலில் சேர்க்கவும்.

பிறகு ஒரு பேரிச்சம் பழத்தை விதை நீக்கிவிட்டு பாலில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்கவும்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி சுவைக்காக சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் விந்தணுக்களின் உற்பத்தி அதிகமாகும்.

மற்றுமொரு தீர்வு

1)வால்நட்
2)பாதாம் பருப்பு
3)முந்திரி பருப்பு
4)தேன்

நான்கு பாதாம் பருப்பு,நான்கு முந்திரி பருப்பு மற்றும் நான்கு வால்நட்டை ஒரு வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.இந்த பொடியை கிண்ணத்தில் கொட்டி சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.