குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க.. பாலுடன் இந்த இரண்டு பொருட்களை அரைத்து கொடுங்கள்!!

Photo of author

By Rupa

அதிக சத்துக்கள் நிறைந்த மலிவு விலை கனிகளில் ஒன்று வாழைப்பழம்.இது அனைத்து சீசனிலும் கிடைக்க கூடியது.வாழைப்பழம் உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் எடை குறைப்பு என இரண்டிற்கும் பயன்படுகிறது.

ஒரு வருடம் ஆன குழந்தைக்கு வாழைப்பழம்,பேரிச்சம் பழத்தை பாலுடன் அரைத்து கொடுத்தால் அவர்களின் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.

இந்த பானத்தை குழந்தைகள்,பெரியவர்கள் என்று அனைவரும் அருந்தலாம்.வாழைப்பழத்தில் நார்ச்சத்து,கொழுப்பு,புரதம்,வைட்டமின் சி,கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.

பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம்,பாஸ்பரஸ்,வைட்டமின்கள்,மெக்னீசியம்,கால்சியம்,தாதுக்கள் உள்ளிட்டவை அடங்கியிருக்கிறது.அதேபோல் பாலில் கால்சியம்,வைட்டமின் பி,புரதம் உள்ளிட்டவை நிறைந்திருக்கிறது.

வாழைப்பழ மில்க்ஷேக் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

1)வாழைப்பழம் – ஒன்று
2)பேரிச்சம் பழம் – ஒன்று(விதை நீக்கப்பட்டது)
3)பால்(காய்ச்சியது) – 200 மில்லி

செய்முறை:

ஒரு பழுத்த வாழை பழத்தை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு மிக்ஸி ஜாரில் போடவும்.

பிறகு ஒரு விதை நீக்கப்பட்ட பேரிச்சம் பழத்தை அதில் போட்டு 200 மில்லி காய்ச்சி ஆறவைத்த பாலை ஊற்றி மைய்ய அரைக்கவும்.இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.

அதேபோல் பாதாம் பருப்பை ஊற வைத்து தோல் நீக்கி விட்டு வாழைப்பழம்,பேரிச்சம் பழத்துடன் சேர்த்து பால் ஊற்றி அரைத்து பருகலாம்.சுவைக்காக தேன் சேர்த்துக் கொள்ளலாம்.குழந்தைகளுக்கு 50 மில்லி கொடுத்தால் போதுமானது.வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த பானத்தை செய்து கொடுத்தால் குழந்தைகளின் உடை எடை அதிகரிக்கும்.