உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க.. நீங்கள் குடிக்க வேண்டிய ஹெல்தி பானம் இது!!

Photo of author

By Divya

உடலில் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்க.. நீங்கள் குடிக்க வேண்டிய ஹெல்தி பானம் இது!!

Divya

அனைத்து பருவ காலத்திலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டியது முக்கியம்.நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் காய்ச்சல்,சளி,இருமல் மற்றும் உடல் சோர்வு பிரச்சனைகள் ஏற்படும்.கோடை காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இந்த வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து செய்யுங்கள்.

மஞ்சள் பால்

பசும் பால் மஞ்சள் கலந்து குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.மஞ்சளில் இருக்கின்ற குர்குமின் என்ற வேதிப்பொருள் நிறைந்திருக்கிறது.இந்த மஞ்சளை பாலில் கலந்து குடிப்பதால் கோடை கால நோய்கள் கட்டுப்படும்.

தர்பூசணி சாறு

வெயில் கால பழமான தர்பூசணியில் நீர்ச்சத்து நிறைய நிறைந்திருக்கிறது.இந்த தர்பூசணி பழத்தை ஜூஸாக செய்து குடித்து வந்தால் உடல் சூடாகாமல் இருக்கும்.அதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு பெருகும்.

இளநீர்

குளிர்ச்சி நிறைந்த இளநீரில் தாதுக்கள் மற்றும் இயற்கை சர்க்கரை அதிகமாக நிறைந்திருக்கிறது.இந்த இளநீரை கோடை காலத்தில் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

உடல் சூடு தணிய அம்மை நோய்கள் வராமல் இளநீரில் பாதாம் பிசின்,சியா விதைகளை ஊறவைத்து குடிக்கலாம்.

கம்பு கூழ்

சிறு தானியங்கனில் கம்பு குளிர்ச்சி நிறைந்த பொருளாக உள்ளது.இந்த கம்பை ஊறவைத்து இடித்து கூழ்,கம்பு சோறு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.கம்பு கூழில் தயிர் சேர்த்துக் கொண்டால் உடல் குளிர்ச்சி அதிகரிக்கும்.கம்பில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

நெல்லிச் சாறு

வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லி சாறு தினம் ஒரு கிளாஸ் பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.தினமும் நெல்லி சாறு பருகினால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் முழுமையாக நீங்கும்.

அஸ்வகந்தா பால்

நாட்டு மருந்து கடையில் அஸ்வகந்தா கிழங்கு கிடைக்கும்.இதை வாங்கி பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி ஒரு தேக்கரண்டி அஸ்வகந்தா பொடி சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.