ஹீமோகுளோபின் அளவு மளமளவென அதிகரிக்க.. முருங்கை கீரையை இப்படி சாப்பிடுங்கள்!!
உடலில் இரத்த அளவு குறைத்தால் இரத்த சோகை பாதிப்பு ஏற்படும்.இந்த இரத்த சோகையை இளம் தலைமுறையினரே அதிகம் சந்தித்து வருகின்றனர்.
இரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்தால் உடல் பலவீனமாகி விடும்.எனவே இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க இந்த ஜூஸை பருகவும்.
தேவையான பொருட்கள்:-
1)முருங்கை கீரை
2)கறிவேப்பிலை
செய்முறை:-
ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை மற்றும் ஒரு கைப்பிடி அளவு முருங்கை கீரையை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பின்னர் சுத்தம் செய்த முருங்கை கீரை மற்றும் கறிவேப்பிலையை போட்டு 1/2 கப் அளவிற்கு வரும் வரை கொதிக்க விட்டு வடித்து பருகி வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோக்ளோபின் அளவு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)மாதுளம் பழம்
2)தண்ணீர்
செய்முறை:-
ஒரு கப் மாதுளம் பழத்தை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக எடுத்து வந்தால் இரத்தத்தில் உள்ள ஹோமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:-
1)பெரிய நெல்லிக்காய்
2)தேன்
செய்முறை:-
முதலில் இரண்டு பெரிய நெல்லிக்காயை விதை நீக்கி அதன் சதை பற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.அதன் பிறகு 1/2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிதளவு தேன் சேர்த்து அருந்தி வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு உயரும்.
தேவையான பொருட்கள்:-
1)பீட்ரூட்
2)எலுமிச்சை சாறு
செய்முறை:-
ஒரு பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸி ஜார் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வந்தால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.