விந்தணுக்கள் பெருக்கம் அடைய.. இந்த லேகியத்தை தேனில் குழைத்து சாப்பிடுங்கள்!!

0
281

ஆண்கள் தங்கள் விந்தணுக்களின் தரம் மற்றும் உற்பத்தி குறைய பல காரணங்கள் சொல்லப்படுகிறது.உடல் சூடு,வாழ்க்கை முறை மாற்றம்,உணவுமுறை மாற்றம் போன்ற காரணங்களால் விந்தணுக்கள் குறைகிறது.

உடலில் அதிக உஷ்ணம் இருந்தால் விந்தணு குறைபாடு ஏற்படும்.அதேபோல் இறுக்கமான உள்ளாடைகள் அணிதல்,அடிக்கடி சுய இன்பத்தில் ஈடுபடுதல் போன்ற காரணங்களாலும் விந்தணு குறைபாடு ஏற்படுகிறது.

ஆண்கள் தங்கள் விந்தணுக்களை ஆரோக்கியமாக மாற்ற நம் பாரம்பரிய வைத்தியத்தை கடைபிடிக்க வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்:

1)தாதுகல்ப லேகியம் – 5 கிராம்
2)ஓரிதழ் தாமரை சூரணம் – 5 கிராம்
3)அமுக்கிரா சூரணம் – 5 கிராம்
4)மதனகாமேஸ்வர லேகியம் – 5 கிராம்
5)தூயத் தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:

தாதுகல்ப லேகியம்,மதனகாமேஸ்வர லேகியம்,அமுக்கிரா சூரணம் மற்றும் ஓரிதழ் தாமரை சூரணம் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

தங்களுக்கு தேவையான அளவு வாங்கிக் கொள்ளுங்கள்.இதில் உள்ள ஒவ்வொரு பொருட்களில் இருந்தும் சுமார் 5 கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து பசும் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் கொதி வந்ததும் 5 கிராம் தாதுகல்ப லேகியம்,5 கிராம் மதனகாமேஸ்வர லேகியம்,5 கிராம் அமுக்கிரா சூரணம் மற்றும் 5 கிராம் ஓரிதழ் தாமரை சூரணம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தூயத் தேன் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து பருகினால் விந்து உற்பத்தி அதிகமாகும்.விந்தணுக்களின் தரத்தை அதிகரிக்கும் மருந்தாகவும் இந்த பால் திகழ்கிறது.

முருங்கை பருப்பு,ஓரிதழ் தாமரை விதையை வெண்ணையில் வறுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.முருங்கை பிசின்,பாதாம் பிசினை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Previous articleஒரே ஒரு தக்காளி போதும்.. எப்பேர்ப்பட்ட கண் கருவளையமும் மாயமாய் மறைந்து போகும்!!
Next articleகாலையில் இந்த பானம் குடித்தால்.. உடல் கொழுப்பு மெழுகு போன்று கரைந்துவிடும்!!