எலும்பும் தோலுமாக உள்ள உடலின் எடையை அதிகரிக்க.. குடிக்கும் பாலில் இந்த ஒரு பொருளை மட்டும் சேர்த்துக்கோங்க!!

Photo of author

By Divya

மோசமான உணவுமுறை பழக்கங்களால் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொண்டு வருபவர்கள் ஒருபுறம் இருந்தால் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை மட்டும் அதிகரித்தபாடில்லை என்று வருந்துபவர்கள் ஒருபுறம் இருக்கின்றனர்.அதிக எடை மற்றும் மிகவும் குறைவான எடை இவை இரண்டும் உடல் அழகை கெடுப்பதோடு ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது.

உடல் எடை அதிகரித்தால் டயட்,உடற்பயிற்சி போன்றவற்றின் மூலம் எடையை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.அதேபோல் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை பின்பற்றி உடல் எடையை அதிகரிக்கலாம்.உடல் எடை குறைவாக இருப்பவர்கள் எப்பொழுதும் நோஞ்சான் போல் காட்சியளிப்பார்கள்.உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் மட்டுமின்றி உடல் எடை குறைவாக இருப்பவர்களுக்கும் எளிதில் நோய் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.எனவே உடல் எடையை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பானம் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நாட்டு மாட்டு பால் – ஒரு கிளாஸ்
2)உலர் திராட்சை – பத்து
3)செவ்வாழைப்பழம் – ஒன்று
4)தேன் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதல் ஸ்டெப்:

நீங்கள் முதலில் நாட்டு மாட்டு பாலை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.இதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கால் கிளாஸ் அளவிற்கு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்துங்கள்.

இரண்டாவது ஸ்டெப்:

அடுத்து பத்து உலர் திராட்சை பழத்தை ஒரு கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி மண்,தூசி இல்லாமல் அலசி எடுத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது ஸ்டெப்:

பிறகு ஒரு செவ்வாழை பழத்தை தோல் நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நான்காவது ஸ்டெப்:

பிறகு மிக்சர் ஜார் ஒன்றை எடுத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்.அடுத்து அதில் உலர் திராட்சையை போட்டு பேஸ்ட் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து நறுக்கி வைத்துள்ள செவ்வாழைப்பழ துண்டுகளை அதில் போட்டு பேஸ்ட் பதம் வரும் வரை அரைக்க வேண்டும்.

ஐந்தாவது ஸ்டெப்:

அடுத்து இந்த செவ்வாழைப்பழ பேஸ்டை சூடாகி கொண்டிருக்கும் பாலில் போட்டு மிதமான தீயில் கெட்டியாகும் வரும் வரை கொதிக்க வையுங்கள்.

ஆறாவது ஸ்டெப்:

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு தேக்கரண்டி தூயத் தேனை அதில் கலந்து காலை நேரத்தில் பருகுங்கள்.இந்த பாலை தொடர்ந்து ஒரு மாத காலம் பருகி வந்தால் உடல் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.