இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

Photo of author

By Divya

இந்த 1 காயை மட்டும் இப்பாடி சாப்பிடுங்கள்.. இரவு கண்ணைக்கட்டிக் கொண்டு தூக்கம் வரும்!!

Divya

உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் இனி கவலையை விடுங்கள்.இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பை பின்பற்றினால் இரவில் நன்றாக தூக்கம் சொக்கி கொண்டு வரும்.

தேவையான பொருட்கள்:-

**புடலங்காய் – 100 கிராம்
**வெண் பூசணி – 200 கிராம்
**மிளகுத் தூள் – கால் தேக்கரண்டி
**உப்பு – சிறிதளவு
**தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு சிறிய சைஸ் புடலங்காய் எடுத்து தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பின்னர் புடலங்காய் விதையை அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வெண் பூசணிக்காயை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அடுத்து மிக்சர் ஜாரில் புடலங்காய் துண்டுகள் மற்றும் வெண் பூசணி துண்டுகளை போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும்.

அதன் பிறகு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு அரைத்த புடலங்காய் கலவையை அதில் போட்டு கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் கால் தேக்கரண்டி அளவிற்கு மிளகுத் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.

தேவையான பொருட்கள்:-

**பால் – ஒரு கிளாஸ்
**மஞ்சள் தூள் – சிட்டிகை அளவு
**ஜாதிக்காய் தூள் – கால் தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு மஞ்சள் தூள் மற்றும் கால் தேக்கரண்டி ஜாதிக்காய் பொடி போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பாலை இரவில் குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.