வெயில் காலத்தை போலவே குளிர்காலத்திலும் சரும பிரச்சனைகள் ஏற்படுகிறது.சரும வெடிப்பு,எரிச்சல்,போன்றவற்றால் முக அழகு குறைகிறது.இதை சரி செய்ய கீழ்கண்ட பியூட்டி டிப்ஸை பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்:
1)காய்ச்சாத பால் – இரண்டு தேக்கரண்டி
2)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
3)காட்டன் பஞ்சு – ஒன்று
செய்முறை விளக்கம்:
கிண்ணம் ஒன்றில் இரண்டு தேக்கரண்டி அளவு காய்ச்சாத பால் ஊற்றிக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் ஒரு காட்டன் பஞ்சு எடுத்து பாலில் டிப் செய்து முகம் முழுவதும் ஒத்தி எடுங்கள்.அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.இவ்வாறு செய்தால் சரும வறட்சி நீங்கி ஒரு பொலிவு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
1)தக்காளி பழம் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
கனிந்த தக்காளி பழம் ஒன்றை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து முகம் முழுவதும் அப்ளை செய்யுங்கள்.இதை அரை மணி நேரத்திற்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் பளபளப்பாக மாறும்.
தேவையான பொருட்கள்:
1)உருளைக்கிழங்கு
2)தேன்
செய்முறை விளக்கம்:
சிறிய அளவிலான உருளைக்கிழங்கை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.பிறகு உருளைக்கிழங்கு சாறை கிண்ணத்திற்கு பிழிந்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள்.
இதை முகம் முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி சுத்தம் செய்யவும்.தொடர்ந்து இந்த ரெமிடியை செய்து வந்தால் முக வறட்சி நீங்கிவிடும்.