கோடை சூடு உடலை நெருங்காமல் இருக்க.. இந்த 6 வகை ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்!!

Photo of author

By Divya

கோடை சூடு உடலை நெருங்காமல் இருக்க.. இந்த 6 வகை ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்!!

Divya

வெயில் காலத்தில் அதிகப்படியான உடல் சூட்டால் பல்வேறு பாதிப்புகளை அனுபவிக்க நேரிடுகிறது.அம்மை,வியர்க்குரு,வேனல் கட்டி,அரிப்பு,எரிச்சல்,வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் உடல் சூடுவதால் ஏற்படுகிறது.எனவே உடல் சூட்டை தணித்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 வகை ஜூஸ் செய்து பருகுங்கள்.

ஜூஸ் 01:

1)புதினா
2)எலுமிச்சை

முதலில் பத்து புதினா இலைகளை தண்ணீரில் போட்டு அலசி எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடல் சூடு குறைந்துவிடும்.உடல் சூட்டை தணிக்க புதினா இலை பெரிதும் உதவியாக இருக்கிறது.

ஜூஸ் 02:

1)வெண்பூசணி
2)புதினா

ஒரு கீற்று வெண்பூசணி காயை விதை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஐந்து புதினா இலைகள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகினால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாகும்.

ஜூஸ் 03:

1)கொத்தமல்லி
2)இஞ்சி
3)எலுமிச்சை

கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.இதை மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு ஒரு பீஸ் இஞ்சி துண்டை தோல் நீக்கிவிட்டு கொத்தமல்லி தலையுடன் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜூஸை கிளாஸிற்கு ஊற்றி எலுமிச்சை சாறு கலந்து பருகினால் உடல் சூடாகாமல் இருக்கும்.

ஜூஸ் 04:

1)வெந்தயம்
2)தண்ணீர்

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை கிண்ணத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு ஜூஸ் பதத்திற்கு அரைத்து குடித்து வந்தால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

ஜூஸ் 05:

1)பெருஞ்சீரகம்
2)தண்ணீர்

ஒரு கிண்ணத்தில் பெருஞ்சீரகம் 10 கிராம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைத்து குடித்தால் உடல் சூடாவது கட்டுப்படும்.வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

ஜூஸ் 06:

1)சோற்றுக்கற்றாழை
2)தண்ணீர்

ஒரு கற்றாழை துண்டை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை தண்ணீரில் போட்டு நன்றாக அலசி மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஜூஸாக பருகி வந்தால் உடல் சூடு முழுமையாக தணியும்.அதேபோல் துளசி இலை ஊறவைத்த பானத்தை பருகி வந்தால் உடல் சூடு தணியும்.