இரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டால் அதை குறைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யலாம்.
பிளட் பிரஷர் அதிகரிக்க காரணங்கள்:
*உடல் பருமன்
*காபின் உணவுகள்
தேவையான பொருட்கள்:-
1)ரணபலா இலை – ஒன்று
2)தண்ணீர் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் ஒரு ரணபலா இலையை பறித்து தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
2.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதன் பிறகு சுத்தம் செய்த ரணபலா இலையை கிள்ளி அந்த நீரில் போட வேண்டும்.
3.இந்த பானம் ஐந்து நிமிடம் வரை மிதமான தீயில் கொதித்து வரும் வரை காத்திருக்க வேண்டும்.பிறகு அடுப்பை அணைத்துவிட்டு பானத்தை 10 நிமிடங்களுக்கு ஆறவிட வேண்டும்.பிறகு இதை கிளாஸ் ஒன்றிற்கு வடிகட்டி பருக வேண்டும்.இதை காலை நேரத்தில் பருகினால் பிளட் பிரஷர் குறையும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)கொத்தமல்லி விதை – இரண்டு தேக்கரண்டி
2)செம்பருத்தி இதழ் – நான்கு
3)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
4)தேன் – இரண்டு தேக்கரண்டி
5)தண்ணீர் – ஒன்றரை கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
1.முதலில் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
2.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து நான்கு செம்பருத்தி இதழை போட வேண்டும்.
3.இந்த பானம் நன்றாக கொதித்து முக்கால் கிளாஸாக வர வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இரண்டு தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
4.அடுத்து அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பருகினால் பிளட் பிரஷர் கட்டுப்படும்.அதேபோல் இஞ்சி துண்டை நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பிளட் பிரஷர் குறையும்.