பிளட் சுகர் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க.. நீங்கள் பாலோ செய்ய வேண்டிய 5 டிப்ஸ் இதோ!!

இன்று சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க காரணம் உணவுமுறை பழக்கமே.கடந்த காலங்களில் வயது முதுமை காலத்தில் ஏற்படக் கூடிய நோய் பாதிப்புகளில் ஒன்றாக இருந்த சர்க்கரை நோய் தற்பொழுது இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படுகிறது.

சர்க்கரை நோய்க்கான காரணங்கள்:

1)அதிக இனிப்பு உணவுகள்
2)மாவுச்சத்து நிறைந்த உணவுகள்
3)சோம்பல் வாழ்க்கைமுறை
4)பரம்பரைத் தன்மை
5)தூக்கமின்மை
6)உடல் பருமன்
7)மது மற்றும் புகைப்பழக்கம்

சர்க்கரை நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

1.அதிக இனிப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.அதேபோல் அதேபோல் உணவில் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

2.உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.இன்சுலின் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

3.அடிக்கடி இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும்.மது மற்றும் புகைப்பழத்தை கைவிட வேண்டும்.

4.அதிக கொழுப்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.சிவப்பு இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும்.

5.தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி,நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.முழு தானிய உணவுகள்,பருப்பு வகைகளை சாப்பிட வேண்டும்.இனிப்பு குறைவான பழங்களை சாப்பிடலாம்.ராகியை அரைத்து களி,கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.

மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்.குளிர்பானங்கள்,பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.உணவில் பருப்பு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.