நம் அனைவருக்கும் கண் பார்வை திறன் அதிகாமாக இருக்க வேண்டியது அவசியம்.ஆனால் இக்காலத்தில் பலருக்கு கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சரி செய்ய கண் பார்வையை கூர்மையாக்க ஆப்பிரிகாட் பழத்தில் தேநீர் செய்து பருகலாம்.
தேவையான பொருட்கள்:-
1)ஆப்பிரிகாட் பழம் – கால் கிலோ
2)தேன் – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
ஸ்டெப் 01:
முதலில் கடையில் கால் கிலோ அளவிற்கு ஆப்பிரிகாட் பழம் வாங்கிக் கொள்ளுங்கள்.இந்த பழம் பெரும்பாலும் சீனா,அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் தான் அதிகம் விளைகிறது.இந்த பழம் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் தான் விளைகிறது.
இப்பழத்தை வாங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்ய வேண்டும்.பிறகு அதன் தோலை மட்டும் பீலர் கொண்டு நீக்கிவிட்டு வெயிலில் 10 முதல் 15 நாட்களுக்கு மேல் காய வைத்துக் கொள்ள வேண்டும்.
உலர் திராட்சை பதத்திற்கு காய வைத்துக் கொள்ள வேண்டும்.பழத்தை தொட்டால் நன்கு உலர்ந்த நிலையிலும் அதே சமயம் உள்ளிருக்கும் சதைப்பற்று அதிக மிருதுவாகவும் இருக்க வேண்டும்.
இந்த ஆப்பிரிகாட் பழத்தை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
தண்ணீர் சூடானதும் உலர்த்தி வைத்துள்ள ஆப்பிரிகாட் பழத்தில் இரண்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இந்த தேநீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இந்த பானத்தை தொடர்ந்து பருகி வந்தால் கண் பார்வை திறன் அதிகரிக்கும்.
இந்த உலர் பழத்தை தேனில் ஊறவைத்து வைத்து சாப்பிட்டால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு பன்மடங்கு அதிகரிக்கும்.
அதேபோல் செரிமானப் பிரச்சனை,சருமப் பிரச்சனை,வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையை சரி செய்து கொள்ள இந்த உலர் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.இதய ஆரோக்கியம் மேம்பட இந்த பழத்தை உட்கொள்ளலாம்.இந்த பழத்தில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டின் கண் பார்வையை தெளிவாக்க உதவுகிறது.எலும்பு வலிமையை அதிகரிக்க இந்த பழம் சிறந்த தீர்வாக அமைகிறது.