உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க நோயின்றி வாழ மஞ்சள் காபி செய்து தினமும் பருகுங்கள்.இன்றைய காலகட்டத்தில் அனைவரும் அருந்த வேண்டிய ஒரு காபி இது.
தேவையான பொருட்கள்:
1)மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
2)காபி தூள் – 1/2 தேக்கரண்டி
3)பாதாம் பால் (அ) தேங்காய் பால் – ஒரு கப்
4)மிளகு – இரண்டு
செய்முறை விளக்கம்:
முதலில் பாதாம் அல்லது தேங்காய் துருவல் வைத்து பால் தயாரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.நீங்கள் பாதாம் பருப்பில் பால் தயாரிக்க விருப்பினால் 10 முதல் 20 பாதாமை 10 மணி நேரத்திற்கு முன்பே ஊறவைத்து விடுங்கள்.
பிறகு பாதாம் பருப்பு தோலை நீக்கிவிட்டு பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் தேங்காய் பாலில் டீ போட விரும்பினால் அதற்கு முதலில் நீங்கள் அரை மூடி தேங்காயை துருவி மிக்சர் ஜாரில் போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.
இந்த தேங்காய் பாலை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து கால் கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அதன் பிறகு 1/2 தேக்கரண்டி காபி தூளை அதில் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
பிறகு தயாரித்து வைத்துள்ள பாதாம் பால் அல்லது தேங்காய் பாலை அதில் ஊற்றவும்.காபி சமயத்தில் 1/4 தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்கவும்.
விருப்பப்பட்டால் இரண்டு மிளகை இடித்து காபியில் சேர்த்துக் கொள்ளலாம்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட காபியை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி பருகவும்.ஆரோக்கியம் இல்லாத டீ,காபிக்கு பதில் இந்த மஞ்சள் காபி செய்து பருகி வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.