நோயின்றி வாழ.. ஆயுள் பெருக இந்த ஒரு பொடியும் ஒரு கிளாஸ் தண்ணீரும் போதும்!!

Photo of author

By Divya

நோயின்றி வாழ.. ஆயுள் பெருக இந்த ஒரு பொடியும் ஒரு கிளாஸ் தண்ணீரும் போதும்!!

Divya

கறிவேப்பிலை நமக்கு பல நன்மைகளை கொடுக்கிறது.கறிவேப்பிலையை தினமும் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் பாதிப்பு கட்டுப்படும்.கறிவேப்பிலை முடி வளர்ச்சி உதவுகிறது.செரிமானப் பிரச்சனை நீங்க கறிவேப்பிலை சாப்பிடலாம்.

உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கறிவேப்பிலை பானம் செய்து பருகலாம்.கண் பார்வை திறன் மேம்பட கறிவேப்பிலை சாப்பிடலாம்.இதனுடன் சீரகம்,பட்டை போன்றவற்றை சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை பொடி – 100 கிராம்
2)சீரகப் பொடி – 50 கிராம்
3)பட்டை பொடி – 25 கிராம
4)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

1.ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து தண்ணீரோ ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.பிறகு இதை தண்ணீர் ஈர்த்துவிட்டு இரண்டு மணி நேரம் உலர்த்த வேண்டும்.

2.பின்னர் இந்த கறிவேப்பிலையை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.இதை ஒரு தட்டில் கொட்டி வைக்க வேண்டும்.

3.அடுத்து 50 கிராம் சீரகத்தை வாணலியில் போட்டு லேசாக வறுக்க வேண்டும்.அதேபோல் 25 கிராம் பட்டையை அதில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.இப்பொழுது கறிவேப்பிலை,பட்டை மற்றும் சீரகத்தை நன்றாக ஆறவைக்க வேண்டும்.

4.அதன் பிறகு இந்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அதற்கு அடுத்து அரைத்த கறிவேப்பிலை பொடியை அதில் கொட்டி காய்ச்ச வேண்டும்.உடல் ஆரோக்கியத்திற்கு இந்த பானத்தை செய்து குடிக்கலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கறிவேப்பிலை – 100 கிராம்
2)கருப்பு மிளகு – 10 கிராம்
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

செய்முறை விளக்கம்:-

கறிவேப்பிலையை நன்றாக காயவைத்துக் கொள்ள வேண்டும்.இதை லேசாக வறுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் 10 கிராம் கருப்பு மிளகை வாணலியில் போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பிறகு இவை இரண்டையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அரைத்த பொடி 10 கிராம் எடுத்து தண்ணீரில் மிக்ஸ் செய்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.இந்த பானத்தில் இனிப்பு சுவை எதையும் சேர்க்கக் கூடாது.