ஒரு மாதத்தில் உடலில் 10 கிலோ காணாமல் போக.. இந்த ஆறு பழக்கங்களை பாலோ பண்ணுங்க!!

Photo of author

By Divya

ஒரு மாதத்தில் உடலில் 10 கிலோ காணாமல் போக.. இந்த ஆறு பழக்கங்களை பாலோ பண்ணுங்க!!

Divya

உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்க காரணம் நாம் உண்ணும் மோசமான உணவுகள்தான்.இன்றைய கால உணவுகள் நோய் பாதிப்புகளை உண்டாக்க கூடியவையாக இருக்கின்றது.நாம் சாப்பிடும் பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கெடுதல் தரக் கூடியவையே.

எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்புகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும்.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால் சர்க்கரை நோய் முதல் மாரடைப்பு வரையிலான நோய் பாதிப்புகளை நாம் அனுபவிக்க நேரிடும்.

எனவே நாம் நமது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமான விஷயமாகும்.உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்த தவறினால் நிச்சயம் உடல் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.எனவே உடல் எடையை கட்டுப்படுத்த சில வழிகளை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

1)முதலில் உடல் எடையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உங்கள் மனதிற்கு இருக்க வேண்டும்.உணவு முறையில் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

2)தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி,நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.தினமும் 10000 காலடிகள் நடக்க வேண்டும்.

3)இனிப்பு மற்றும் உப்பு உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

4)இரவில் நேரத்தில் உறங்கி நேரத்தில் எழும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும்.

5)புரத உணவுகளை உட்கொள்ள வேண்டும்.வேக வைத்த முட்டையின் வெள்ளைக்கரு,100 கிராம் கோழி இறைச்சி உணவுகளை சாப்பிட வேண்டும்.காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும்.

6)உணவு உட்கொண்ட உடன் உறங்குவதை தவிர்க்க வேண்டும்.அதிகளவு உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.இவற்றை தொடர்ந்து பின்பற்றி வந்தால் உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.