ஒரே நாளில் படர் தாமரை மறைய.. குப்பைமேனி கீழாநெல்லி இலையை இந்த மாதிரி பண்ணுங்க!!

Photo of author

By Divya

ஒரே நாளில் படர் தாமரை மறைய.. குப்பைமேனி கீழாநெல்லி இலையை இந்த மாதிரி பண்ணுங்க!!

Divya

நம் சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் தொற்று பாதிப்புகளுடன் போராட வேண்டியிருக்கும்.உடலில் அதிக வியர்வை மற்றும் அழுக்குகள் தேங்கினால் துர்நாற்றம் வீசுவதோடு தேமல்,படர் தாமரை,வெண்புள்ளி,கரும்புள்ளி ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.

இதில் படர் தாமரை பாதிப்பு ஏற்பட்டால் அரிப்பு,எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.இந்த படர் தாமரை பாதிப்பில் இருந்து மீள இந்த வீட்டு வைத்தியக் குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

தீர்வு 01:

பூவரசங்காய்

பூவரசு மரத்தில் இருந்து கிடைக்கும் பூவரசங்காயை பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்த பூவரசு காயில் இருந்து வெளியேறும் மஞ்சள் நிற திரவத்தை படர் தாமரை மீது அப்ளை செய்ய வேண்டும்.சிறிது நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீரில் மஞ்சள் தூள் மற்றும் வேப்பிலை சாறு சேர்த்து படர் தாமரை பாதிப்பு உள்ள இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து நீங்கள் செய்து வந்தீர்கள் என்றால் நிச்சயம் படர் தாமரை பாதிப்பு குணமாகும்.

தீர்வு 02:

சந்தனக் கட்டை
எலுமிச்சை சாறு

ஒரு சந்தன கட்டையை தண்ணீரில் ஊறவைத்து தரையில் வைத்து தேய்க்க வேண்டும்.பிறகு இந்த சந்தன பேஸ்டை கிண்ணத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை படர் தாமரை மீது அப்ளை செய்தால் சீக்கிரமாக அவை குணமாகிவிடும்.

தீர்வு 03:

தேங்காய் எண்ணெய்
குப்பைமேனி இலை
கீழாநெல்லி இலை

குப்பைமேனி இலை மற்றும் கீழாநெல்லி இலையை சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து 100 மில்லி தேங்காய் எண்ணையை கடாயில் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.அடுத்து அதில் அரைத்த குப்பைமேனி கீழாநெல்லி விழுதை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த எண்ணையை ஆறவைத்து படர் தாமரை மீது தடவினால் அவை சீக்கிரம் குணமாகும்.

தீர்வு 04:

தும்பை இலை
திரிபலா சூரணம்
மஞ்சள் தூள்

தும்பை இலை தேவையான அளவு எடுத்து வாணலியில் போட்டு வதக்க வேண்டும்.அடுத்து இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்டில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணம் மற்றும் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை படர் தாமரை மீது பூசினால் அவை சீக்கிரம் குணமாகிவிடும்.