இன்று பெரும்பாலான மக்கள் நரம்பு தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.நரம்புகளில் காயம் ஏற்படுதல்,ஊட்டச்சத்து குறைபாடு,வயது முதுமை போன்ற பல காரணங்களால் நரம்புகள் வலிமை இழக்கிறது.சிலருக்கு எதிர்பாராத நேரத்தில் கால் நரம்புகள் சுண்டி இழுத்து நடக்க முடியாத நிலை ஏற்படும்.
நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட காரணங்கள்:
1)வயது முதுமை
2)ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்தல் மற்றும் நின்று இருத்தல்
3)வைட்டமின் குறைபாடு
4)ஊட்டச்சத்து குறைபாடு
5)நரம்புகளில் அடி படுதல்
6)மதுப்பழக்கம்
நரம்புகளை வலிமையாக்கும் உணவுகள்:-
1)அத்திப்பழம்
2)பிரண்டை
3)பெரிய நெல்லிக்காய்
4)வெற்றிலை
5)முருங்கை கீரை
6)பேரிச்சம் பழம்
7)தக்காளி
8)கோழி ஈரல்
நரம்புகளை வலிமைப் படுத்தும் பானம்:
தேவையான பொருட்கள்:-
**தண்ணீர் விட்டான் கிழங்கு சூரணம் – அரை தேக்கரண்டி
**பூனைக்காலி விதை சூரணம் – அரை தேக்கரண்டி
**அமுக்கிரா கிழங்கு சூரணம் – அரை தேக்கரண்டி
**தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
*முதலில் தண்ணீர் விட்டான் கிழங்கு சூரணம்,பூனைக்காலி விதை சூரணம் மற்றும் அமுக்கிரா கிழங்கு சூரணத்தை நாட்டு மருந்து கடையில் இருந்து வாங்கிக் கொள்ள வேண்டும்.இல்லையேல் இந்த மூலிகைகளை வாங்கி பொடியாக்கி வைத்து பயன்படுத்தலாம்.
*பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.பின்னர் வாங்கி வந்த அமுக்கிரா கிழங்கு சூரணம்,ண்ணீர் விட்டான் கிழங்கு சூரணம் மற்றும் பூனைக்காலி விதை சூரணம் ஆகியவற்றை தலா கால் தேக்கரண்டி அளவு அதில் போட்டு குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
*பிறகு அடுப்பை அணைத்துவிட்டு இந்த பானத்தை இளஞ்சூடு பக்குவம் வந்த பின்னர் பருக வேண்டும்.இதை தினமும் செய்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும்.
அதேபோல் இரவு நேரத்தில் ஜாதிக்காய் தூளை வெது வெதுப்பான நீரில் கலந்து குடித்தால் நரம்புகள் வலிமை பெறும்.இலவங்கப்பட்டை தூளை தண்ணீரில் கலக்கி குடித்தால் நரம்பு வலிமை அடையும்.
அதேபோல் மஞ்சள் கலந்த நீரை தினமும் பருகி வந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.