மூட்டு எலும்புகள் எஃகு போன்று உறுதிபெற.. இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

Photo of author

By Divya

மூட்டு எலும்புகள் எஃகு போன்று உறுதிபெற.. இந்த துவையல் செய்து சாப்பிடுங்கள்!!

Divya

உங்கள் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்க பிரண்டையை வைத்து சுவையான துவையல் செய்து சாப்பிடலாம்.இந்த துவையல் மூட்டு பலத்தை அதிகரிப்பதோடு,எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள்:-

1)பிரண்டை
2)எண்ணெய்
3)உளுந்து பருப்பு
4)பூண்டு பல்
5)வர மிளகாய்
6)வெங்காயம்
7)தக்காளி
8)தேங்காய்
9)கடுகு
10)எண்ணெய்
11)கறிவேப்பிலை
12)உப்பு
13)கொத்தமல்லி விதை
14)கறிவேப்பிலை

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு கப் பிரண்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.அடுத்து இதை வாணலியில் போட்டு எண்ணெய் ஊற்றி வதக்குங்கள்.

அடுத்து இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.பின்னர் கொத்தமல்லி,தக்காளி,வெங்காயம்,பூண்டு,வர மிளகாய் ஆகியவற்றை போட்டு வதக்கி எடுக்க வேண்டும்.

பின்னர் இதை தட்டிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.அடுத்து வதக்கிய பொருட்களை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு எண்ணெய்,கடுகு போட்டு பொரிய விடுங்கள்.அதன் பிறகு அரைத்த விழுதை அதில் ஊற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த துவையலுக்கு தேவையான அளவு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.இதை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலிமை பன்மடங்கு அதிகரிக்கும்.

அதேபோல் பிரண்டையில் சூப் பெய்து சாப்பிட்டால் மூட்டு வலிமை அதிகரிக்கும்.பிரண்டை தோசை,பிரண்டை சட்னி செய்து சாப்பிட்டு வந்தாலும் மூட்டு எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.