கீரைகளில் அதிக ஆரோக்கிய நன்மைகள் கொண்டவை புளிச்ச கீரை.இந்த ஒரு கீரை மலச்சிக்கல்,இரத்த அழுத்தம் போன்ற பல வியாதிகளுக்கு மருந்தாக திகழ்கிறது.இந்த கீரையை கடையலாக சாப்பிட சுவையாக இருக்கும்.
புளிச்ச கீரை ஊட்டச்சத்துக்கள்:
1.வைட்டமின் ஏ 2.வைட்டமின் சி 3.கால்சியம் 4.பாஸ்பரஸ் 5.இரும்பு 6.நார்ச்சத்து
புளிச்ச கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்:-
1)இரத்த அழுத்த பாதிப்பை சரி செய்ய இந்த கீரையை சாப்பிடலாம்.தொண்டை வலி இருப்பவர்கள் இந்த கீரை வேகவைத்த தண்ணீரை குடிக்கலாம்.
2)உடலில் படிந்துள்ள கெட்ட கொழுப்பை கரைக்க இந்த புளிக்க கீரையை கடையலாக சாப்பிடலாம்.
3)சருமம் சார்ந்த பாதிப்புகள் அனைத்தையும் இந்த கீரை சரி செய்கிறது.கீரையில் இருக்கின்ற வைட்டமின் சி சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
4)காய்ச்சல்,இருமல் இருப்பவர்கள் இந்த கீரையை உணவாக எடுத்துக் கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.
5)பசி உணர்வை கட்டுப்படுத்த இந்த கீரையை கடையலாக சாப்பிடலாம்.இந்த கீரையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.இதை உணவாக எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் பாதிப்பு குணமாகும்.
6)இதில் இருக்கின்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
7)இரத்த உற்பத்தியை அதிகரிக்க,இரத்த சோகை நோய் குணமாக புளிச்ச கீரை சாப்பிடலாம்.
8)காசநோய் பாதிப்பில் இருந்து மீள புளிச்ச கீரை சாப்பிடலாம்.இந்த கீரை சாப்பிட்டால் இரத்தத்தில் இருக்கின்ற கழிவுகள் வெளியேறும்.
9)சொறி சிரங்கு பாதிப்பில் இருந்தும் மீள புளிச்ச கீரை சட்னி செய்து சாப்பிடலாம்.புளிச்ச கீரை பூவை இடித்து மிளகு சேர்த்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
10)சுவாசம் சம்மந்தபட்ட பாதிப்புகளில் இருந்து மீள புளிச்ச கீரையை உட்கொள்ளலாம்.