பொதுவாக வீட்டுக் கடன் வாங்க நினைப்பவர்களும் வீட்டுக் கடன் வாங்கி கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கும் இது மிகப்பெரிய தலைவலியாகவே இருக்கிறது. காரணம் EMI ஒவ்வொரு மாதமும் இதற்கான நாள் நெருங்கும் பொழுது அந்த பணத்தை தயார் செய்வதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்கவும் உடனடியாக லாபத்துடன் வீட்டு கடனை கட்டி முடிப்பதற்கான வழி குறித்து இந்த பதிவில் காணலாம்.
சில நேரங்களில் நம்முடைய சிந்தனையிலிருந்து சற்று தள்ளி நின்று மாற்றி யோசிக்கும் பொழுது நமக்கு மிகவும் எளிமையான மற்றும் சுலபமான வழிகள் கிடைப்பதுண்டு. ஆனால் அதனை பெரும்பாலும் யாரும் செய்ய நினைப்பதில்லை. அப்படிப்பட்ட மாற்றி யோசிக்கப்பட்ட ஒரு சிந்தனையை தான் இன்று நீங்கள் தெரிந்து கொள்ள போகிறீர்கள்.
சமீபத்தில் ரெப்கோ வட்டி விகிதமானது 2 முறை முதலில் பிப்ரவரி மாதம் 6.50% இருந்து 6.25% ஆக குறைத்தது. அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதம் 6.25% இருந்து 6% ஆக குறைத்தது. இவ்வாறாக இந்தியன் ரிசர்வ் வங்கி குழுவில் இருக்கக்கூடிய 6 உறுப்பினர்கள் இணைந்த ரெப்கோ வட்டி விகிதத்தை குறைத்தது வீட்டு கடன் வாகன கடன் தனிநபர் கடன் என பெற்றவர்களுக்கு மிகப்பெரிய நற்செய்தியாக மாறியது.
ஆனால் இதனை எப்படி பயன்படுத்தினால் நமக்கு நற்செய்தி என்பது பலருக்கு கேள்விக்குறியாகவே உள்ளது. வீட்டுக் கடன் பெற்று இருக்கக்கூடியவர்கள் தங்களுடைய EMI தொகைகளை சரியாக செலுத்தி வரக்கூடிய நிலையில், ஒரு 15 வருடங்களுக்குப் பின் தங்களுடைய கடந்த கையில் சென்று பார்க்கும் பொழுது அதில் வட்டி மட்டுமே குறைந்திருக்கும் நிலையில் அசலில் பெருந்தொகை அப்படியே இருப்பது அதிர்ச்சியை அளிக்கக்கூடியதாக அமைந்திருக்கும். பெரும்பாலும் கடன் தொகை காண வட்டியை மட்டுமே செலுத்தி வந்திருக்கிறோம் என்பது அவர்களுக்கு பிற்காலத்தில் தான் தெரிய வருகிறது.
இனி வீட்டு கடன் பெற்றிருக்கக் கூடியவர்கள் தங்களுடைய EMI பணத்தை எடுத்து வைக்கும் போது ஒவ்வொரு மாதமும் அதன் கூடவே 10,000 ரூபாயோ அல்லது தங்களால் முடிந்த தொகையை தனியாக சேர்த்து வைத்தல் அவசியம். இவ்வாறு சேர்த்து வைக்கக்கூடிய பணமானது அந்த வருடத்தின் இறுதியில் 1.20 லட்சமாக இருக்கும் நிலையில் அதனை அப்படியே வங்கியில் தங்களுடைய கடன் தொகையை குறைக்க கட்ட முடியும்.
இவ்வாறு வருடத்திற்கு ஒருமுறை அசலை குறைப்பதால் வட்டியும் ஒவ்வொரு வருடமும் குறைவதோடு 20 வருட காலங்கள் போடப்பட்டிருந்த வீட்டுக்கடன் ஆனது 10 வருடங்களில் முடிந்து விடுவதோடு நமக்கு பல லட்சம் வரை லாபம் கிடைப்பதும் உறுதியாகிவிடும். இதோ ஒவ்வொரு மாதமும் நீங்கள் எவ்வளவு பணத்தை அசலில் இருந்து களிக்கிறீர்கள் என்பதை பொறுத்து மட்டுமே அமையும். எனவே நீங்கள் வீட்டு கடன் பெற்று இருக்கிறீர்கள் அல்லது கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என்றாலோ புதிதாக வீட்டு கடன் வாங்க போகிறீர்கள் என்றாலோ உங்களுடைய இஎம்ஐ தொகையோடு அசலை குறைப்பதற்கான தொகையையும் ஒவ்வொரு மாதமும் எடுத்து வைத்தால் விரைவில் உங்களை கடனாளியாக இருக்கக்கூடிய சூழலில் இருந்து மாற்றிவிடும்