கடைகளில் விற்கும் சத்துமாவைவிட வீட்டில் ஆரோக்கியமான பொருட்களை கொண்டு சத்துமாவு தயாரித்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.சத்துமாவு செய்ய தேவைப்படும் பொருள் மற்றும் சத்துமாவு கஞ்சி செய்யும் முறை பற்றி இங்கு விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:-
பட்டாணி சோளம் – அரை கப்
கம்பு – அரை கப்
தினை அரிசி – அரை கப்
அவல் – அரை கப்
ராஜ்மா – அரை கப்
ராகி – அரை கப்
உலர் இஞ்சி – ஒரு சிறிய துண்டு
மிளகு – கால் தேக்கரண்டி
கருப்பு கவுனி அரிசி – அரை கப்
பாசிப்பருப்பு – கால் கப்
ஏலக்காய் – நான்கு
பார்லி அரிசி – அரை கப்
ஜவ்வரிசி – அரை கப்
கோதுமை – அரை கப்
வால்நட் – கால் கப்
பாதாம் பருப்பு – கால் கப்
முந்திரி பருப்பு – கால் கப்
கொள்ளு பருப்பு – அரை கப்
சீரகம் – ஒரு தேக்கரண்டி
ஓட்ஸ் – அரை கப்
செய்முறை விளக்கம்:-
நீங்கள் முதலில் மேல சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து அடுப்பில் வாணலி வைத்து இவை அனைத்தையும் தனி தனியாக வறுக்க வேண்டும்.அனைத்து பொருட்களையும் பக்குவமாக வறுக்க வேண்டும்.பொருட்கள் கருகிடாமல் பார்த்து பக்குவமாக வறுக்க வேண்டும்.
இவை அனைத்தையும் நன்றாக ஆறவைக்க வேண்டும்.பின்னர் இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு இந்த ஹெல்த் மிக்ஸ் பவுடரை ஒரு சுத்தமான டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து ஒரு கப் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் கொதி வரும் சமயத்தில் அரைத்து வைத்துள்ள ஹெல்த் மிக்ஸ் பவுடர் இரண்டு தேக்கரண்டி அளவு அதில் போட்டு கைவிடாமல் கிளற வேண்டும்.
பாலும் ஹெல்த் மிக்ஸ் பவுடரும் நன்றாக கலந்து பச்சை வாடை நீங்கும் வரை \குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு மாற்றி சுவைக்காக தேன்,நாட்டு சர்க்கரை,பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இந்த சத்துமாவு பவுடரில் கஞ்சி,லட்டு,கேக் போன்ற ருசியான உணவுகள் செய்து சாப்பிடலாம்.