சர்க்கரை நோய் வாழ்நாள் முழுவதும் நம்மை ஆட்டிப்படைக்க கூடிய ஒரு நோய் பாதிப்பாகும்.இந்த சர்க்கரை பாதிப்பில் இருந்து மீள இங்கு கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தினமும் முயற்சி செய்து வாருங்கள்.மருந்து மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோய் கட்டுப்பட இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் உதவும்.
சர்க்கரை நோய் வர காரணங்கள்:-
**உணவுமுறை பழக்கம்
**சோம்பல் வாழ்க்கை
**இனிப்பு உணவுகள்
**பரம்பரைத் தன்மை
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள்:
தேவையான பொருட்கள்:-
1)கருஞ்சீரகம்
2)தண்ணீர்
செய்முறை விளக்கம்:-
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் போட்டு கொதிக்க வையுங்கள்.
இந்த கருஞ்சீரக பானம் நன்றாக கொதித்து வந்த பிறகு அடுப்பை அணைத்துவிடுங்கள்.பின்னர் இந்த பானத்தை ஆறவைத்து வடித்து குடியுங்கள்.
கருஞ்சீரக பானம் சர்க்கரை நோய் பாதிப்பை முழுமையாக கட்டுப்படுத்த உதவுகிறது.இந்த கருஞ்சீரக பானம் சர்க்கரை பாதிப்பு வராமல் காக்கிறது.
தேவையான பொருட்கள்:-
1)பட்டை – ஒரு துண்டு
2)வெந்தயம் – அரை தேக்கரண்டி
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்
செய்முறை விளக்கம்:-
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.பின்னர் அதில் ஒரு துண்டு பட்டை,அரை தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வையுங்கள்.
இந்த பானம் நன்றாக கொதித்து வந்த பின்னர் கிளாஸிற்கு வடிகட்டி கொள்ளுங்கள்.இதை தினமும் பருகினால சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.